ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பதிவு செய்த நாள் : 30 ஜூலை 2021 16:07

டோக்கியோ, ஜூலை 30,

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து  காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கால் இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகானே யாமகுசியை 21க்கு 13,  22 க்கு 20 என்ற புள்ளி கணக்கில் கணக்கில் வெள்ளிக்கிழமையன்று வென்றார்.

தாய்லாந்து விளையாட்டு வீராங்கனைக்கும் சீனாவின் தைப்பேயைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் பிவி சிந்து மோத வேண்டும்.

2016ஆம் ஆண்டு ரியோ நகரில் நடந்த 26 வயது பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.