ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக அமெரிக்க விமானப்படை தலிபான்கள் மீது தொடர்ந்து குண்டு வீசும்: அமெரிக்க இராணுவ அதிகாரி உறுதி

பதிவு செய்த நாள் : 26 ஜூலை 2021 12:40

காபூல்,

ஆப்கானிஸ்தானத்தில் ராணுவ வீரர்கள் மீது தலிபான் அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களை கடுமையாக நடத்தினால் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக அமெரிக்க விமானப்படை தலிபான் நிலைகள் மீது தொடர்ந்து குண்டு வீசும் என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய ஆணையத்தை சேர்ந்த ஜெனரல் மெக்கன்சி ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் நகரில் உள்ள அமெரிக்காவின் தலைமை ராணுவ மையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்பொழுது ஆப்கானிஸ்தானத்தில் பல பகுதிகளிலும் தலிபான்கள் தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளனர் ஆப்கானிஸ்தானத்தில் ராணுவத்தின் மீது தலிபான்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் .தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்தால் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக அமெரிக்க விமானப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்த தயாராக உள்ளது என்றும் மெக்கன்சி குறிப்பிட்டார்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வெளியேறுவதால் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான நெருக்கடி அதிகரிக்கும் என்பதை கொள்வதாக மெக்கன்சி கூறினார்.

 ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வெளியேறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான்கள் இந்த பின்னணியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மீதான தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளனர். தேவைப்பட்டால் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகும் ஆப்கன் ராணுவத்துக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

அப்பொழுது அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படாது ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் வான்வெளியில் இருந்து செயல்படும் என்றும் மெக்கன்சி குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக காந்தகார் உள்ளது காந்தகார் முன்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆண்ட பொழுது அவர்கள் தலைநகரமாக இருந்தது. இப்பொழுது அந்த நகரை தங்கள் வசப்படுத்த தலிபான் படைகள் உக்கிரமாக தாக்குதல் தொடுத்து வருகின்றார்கள். துவக்கத்தில் பின்னடைவை சந்தித்த ஆப்கானிஸ்தான் ராணுவம் இப்பொழுது மீண்டும் தங்களை வலுப்படுத்திக் கொண்டு, தங்கள் அமைப்புகளை திருத்தி அமைத்து வருகிறார்கள்.