ஆப்கானிஸ்தானில் போர் ஓய்வுக்கு பாகிஸ்தான், சீனா அழைப்பு

பதிவு செய்த நாள் : 25 ஜூலை 2021 16:49

செங்டு  (சீனா), ஜூலை 25,

ஆப்கானிஸ்தானத்தில் முழுமையான போர் ஓய்வு அமல் செய்யப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானத்தில் போரிடும் அமைப்புக்கள் போரை நிறுத்திவிட்டு விரிவான அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்ற அரசியல் ஒப்பந்தம் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாகிஸ்தானும் சீனாவும் கோரியுள்ளன.

சீனாவில் சிசுவான் மாகாணத்தின் தலைநகரம் ஆக்கிய செங்கோவி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும்  வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினர் பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கைவிட்டு கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

ஆப்கானிஸ்தானத்தில் ஆப்கானிஸ்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான, அமைதி மற்றும் சீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு இருநாடுகளும் ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் ஆப்கானிஸ்தானத்தில் தலைமையில்,அமைதியான ஸ்திரத் தன்மையுள்ள, வளமான, பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்த்து போரிடும் அரசு உருவாக ஆதரவளிப்பதாக தெரிவித்தன.

இந்த ஆப்கானிஸ்தான் அரசு உறுதியுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் அதே சமயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் காசு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் மின் நிலையத்துக்கு செல்லும் பேருந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக உயிரும் உயிரும் உடமையும் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் அவர்களின் தீய சதித்திட்டங்களை அம்பலப்படுத்தவும் அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் கூட்டு விசாரணை நடத்த இரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளனர் பாகிஸ்தானில் சீன குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சீன நிறுவனங்களின் பாதுகாப்புக்கும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கும் இருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.

இரு நாடுகளின் ஒத்துழைப்பை பெல்ட் ரோடு திட்டங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளிலிலும் மக்களினுடைய நலனுக்காக இது செயல்பட உறுதிபூண்டு இருப்பதாக கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை பிராந்திய நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கான மையமாக மாற்ற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

கொரானா தடுப்பூசி மருந்தை பாகிஸ்தானுக்காக சீனா வழங்கியதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பாகிஸ்தானில் எல்லைகளை பாதுகாக்கவும் பாகிஸ்தானின் இறையாண்மை சுதந்திரத்தை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய - பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனைகளை ஐநா பொதுச் சபை தீர்மானம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்களுக்கு ஏற்ப இருதரப்பும் தீர்வு காண முன்வரவேண்டும் தன்னிச்சையாக நடவடிக்கை மேற்கொள்வதை சீனா கடுமையாக எதிர்க்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் மாநில போலீஸ் படை களுக்குப் பதிலாக இனி பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக்ரஷீத் அகமது செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பகுதியிலுள்ள பாகிஸ்தானுக்கான வாயிலை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தலிபான் படையினருடன் சேருவதற்காக சென்ற கூலிப்படையினர் 7 ஆயிரம் பேரை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் அதற்குள் செல்ல அனுமதித்ததாக ஆப்கானிஸ்தான் அதிபர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தகுந்தது.

தலிபான்களின் ஆப்கானிஸ்தான் வெற்றி பாகிஸ்தானுக்குள் சிந்தி விடக் கூடாது என்பதற்காக எல்லையில் பாகிஸ்தான் படை வீரர்கள் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.