தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 மே 2021 12:10

சென்னை

தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (14-5-2021) ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.

ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அதன்படி,  30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை (14-5-2021) கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.