திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது

பதிவு செய்த நாள் : 08 ஏப்ரல் 2021 11:48

சென்னை:

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில்  அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

துரைமுருகன் ஏற்கனவே  2 டோஸ் கொரோனா தடுப்புமருந்து எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.