கோவிட்- 19 தடுப்பூசி நிர்வாகம்: மாநில அரசுகளுக்கு ஹர்ஷவர்த்தன் கண்டனம்

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 21:25

புதுடெல்லி

பாரதிய ஜனதா கட்சி அல்லாத மற்ற அரசியல் கட்சிகள் ஆளும் டெல்லி மகாராஷ்டிரா பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் மீது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.

டெல்லி அரசு எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும் அல்லது தடுப்பூசி போடுவதற்காக வயது வரம்பை 18க்கு கீழேயே குறைக்க வேண்டும்  என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

மகாராஷ்டிர அரசுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரியிருந்தது.

கண்டனத்துக்கு உரியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல் செய்யாமல் தூங்கி விட்டு அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை மக்கள் மத்தியில் மத்தியிலிருந்து மறைப்பதற்காக தவறான திசை திருப்பும் கோரிக்கைகளை அறிக்கைகளை வெளியிடுகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறினார். இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

நிபுணர்களுடன் நீண்ட ஆய்வு பரிசீலனைக்குப் பிறகு சுகாதாரத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி மருந்துகளை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது ஆனால் மகாராஷ்டிர அரசு முதல் சுற்று தடுப்பூசி மருந்து 86 சதவீதம் பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளது

டெல்லியில் 72 சதவீதம் பேருக்கும் பஞ்சாப் மாநிலம் 64 சதவீதம் பேருக்கும் மட்டுமே முதல் சுற்று தடுப்பூசி மருந்து வழங்கியுள்ளது ஆனால் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 90 சதவீத அளவுக்கு முதல் சுற்று தடுப்பூசி மருந்து வழங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் இரண்டாவது சுற்று தடுப்பூசி மருந்து 41 சதவீதம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் 41 சதவீதம் பேருக்கும் பஞ்சாபில் 27 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டாவது சுற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60 சதவீதத்துக்கு மேல் இரண்டாவது சுற்று தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன என்று ஹர்ஷவர்த்தன் கூறினார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில்  குரோனா வைரஸ் தொற்று. இப்பொழுது படு வேகத்தில் உயர்ந்து வருகிறது.

ஆனால் தொடர்ந்து சத்தீஸ்கர் அரசு தவறான தகவல்களை வழங்கி வருகிறது .தடுப்பூசி மருந்து போதுமான அளவில் கிடைப்பதில்லை என்று வதந்தியை பரப்பி வருகிறது.

சத்தீஸ்கர் மாநில அரசு உலகத்திலேயே முதல் அரசாக தடுப்பூசி மருந்து போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதை ஊக்குவித்தது குறிப்பிடத்தகுந்தது.

 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நாம் பெற்ற லாபத்தை அடுத்து மத்திய அரசை குறை கூறுவதன் மூலமும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை பராமரிப்பது அமல் செய்வதில் அலட்சியம் காட்டுவதன் மூலமும் வீணடிக்கக் கூடாது என்பது மத்திய அரசின் கவலையாகும் என்று ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்