இந்தியா – சீனா இடையே நேரடி பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதாக அமெரிக்கா கருத்து

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 16:35

வாஷிங்டன்,

கவலை தரும் விவகாரங்கள் குறித்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘இது குறித்து நான் குறிப்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நான் சொல்வது என்னவென்றால், கவலைக்குரிய பிரச்சினைகள் குறித்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி உரையாடலை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்’’ என கூறினார்.

இருப்பினும், இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பாகிஸ்தான் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை இந்தியா திரும்ப பெறும் வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சரவை ஏப்ரல் 1ம் தேதி முடிவெடுத்தது.

பாகிஸ்தான் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு அந்நாட்டு வணிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.