திமுகவினர் பண விநியோகம் செய்தனர் : நடிகை குஷ்பு புகார்

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 16:43

சென்னை

திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதை கண்டதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு சுந்தர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக சார்பில் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். திமுக வஞ்சகத்தால் வெல்ல விரும்புகிறது என குஷ்பு சுந்தர் தெரிவித்தார்.