இந்திய பங்குச்சந்தைகளில் இன்று பலத்த சரிவு

பதிவு செய்த நாள் : 05 ஏப்ரல் 2021 17:56

மும்பை /புதுடெல்லி

இந்தியாவின் முக்கிய பங்கு சந்தைகளான மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய இரண்டும் இன்று பலத்த சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீடாக கருதப்படும் சென்செக்ஸ் இன்று 810 . 5 புள்ளிகளை இழந்தது.

இந்திய தேசிய பங்குச் சந்தையின் அடையாளக் குறியீடாக கருதப்படும் நிப்டி இன்று 229 .55 குறியீட்டு புள்ளிகளை இழந்தது.

810 புள்ளிகளை இழந்த மும்பை சென்செக்ஸ் அதன் மதிப்பில் 1.74 சதவீதத்தை இன்று இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது இறுதியில் 49159 . 32 புள்ளிகளில் சென்சஸ் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 229 புள்ளிகள் அல்லது 1.54 சதவீத மதிப்பை இழந்து இறுதியாக 14 637 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் பதிவு பெற்றுள்ள 1897 பங்குகளின் மதிப்பு என்று சரிந்தது மேலும் அங்கு பதிவு பெற்றுள்ள 1067 பங்குகளின் மதிப்பு சற்று உயர்ந்தது 183 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலையிலேயே தொடர்ந்தன.

covid-19 வைரஸ் தொற்றுக்கள் உலக அளவில் உயர்ந்து வருவதும் இந்தியாவிலும் கோபித்து வைரஸ் தொற்று இரண்டாவது முறையாக உயர்ந்து வருவதும் முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. அதனால் இந்திய தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிருப்தியும் அவநம்பிக்கையும் வெளிப்படுத்தினார்கள் அதன் எதிரொலியாகவே பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.