விமான பெட்ரோல் விலை 3 சதவீதம் குறைப்பு

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2021 11:34

புதுடெல்லி

விமான பெட்ரோல் விலை 3% வியாழனன்று குறைக்கப்பட்டது எண்ணெய் கம்பெனிகள் இந்த விலை குறைப்பு அறிவிப்பாளர் மூன்று சதவீத விலை குறைப்பு காரணமாக 1000 லிட்டர் விமான பெட்ரோல் விலையில் ரூபாய் 1,887 குறையும்.  இந்த விலை குறைப்பைத்  தொடர்ந்து 1000 லிட்டர் விமான பெட்ரோல் விலை 5,83,744.16 ரூபாயாக இருக்கும்.

கடந்த பிப்ரவரி மாதம் விமான பெட்ரோல் விலை 4 முறை உயர்த்தப்பட்டது அதைத் தொடர்ந்து இப்போது 3 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது 

கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 முறை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது அதன் காரணமாக பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 135 உயர்ந்தது இப்பொழுது 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெட்ரோல். டீசல் ஆகிய இரண்டின் விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஒரே நிலையில் உள்ளது.