மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 627 புள்ளிகள் சரிவு

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2021 19:19

புதுடில்லி,

வங்கி மற்றும் நிதி பங்குகளின் இழப்புகளால் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 627 புள்ளிகள் சரிவடைந்து 49,509 புள்ளிகளுடன் முடிந்தது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி 154 புள்ளிகள் சரிந்து 14,691 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

எச்.டி.எஃப்.சி, பவர் கிரிட், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் 4.06 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.  

அதேசமயம் ஐடிசி, பஜாஜ் பினான்ஸ், எச்.யூ.எல், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் ஆகியவற்றின் பங்குகள் 1.82 சதவீதம் உயர்ந்துள்ளன.

அதிகரிக்கும் பத்திர விற்பனை மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக அமெரிக்க பங்குகள் சரிந்தன. இதேபோல் சீனா, ஹாங்காங், தென்கொரியா மற்றும் ஜப்பான் பங்குசந்தைகளும் சரிவுடன் முடிவடைந்தன.