14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

பதிவு செய்த நாள் : 07 மார்ச் 2021 14:15

சென்னை

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது 

ஐபிஎல் கோப்பை 2021

ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள விளையாட்டு மைதானங்களில் தலா 10 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் இறுதி விளையாட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் வீரர்கள் பல பேருக்கு அதிக விலைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.