சுவையான கோதுமை அல்வா

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2021 10:50

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்,

சர்க்கரை - 2 கப்,

பாதாம் - 7,

உலர் திராட்சை - 5,

நெய் - 1 கப்,

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்,

முந்திரி - 5,

தண்ணீர் - 1 கப்.

செய்முறை:

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும்.

 

கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.