சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், மமக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு இறுதியானது

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 18:26

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும்.

காதர் மொய்தீன் பேட்டி

தொகுதி பங்கீட்டிற்குப் பிறகு ஐயூஎம்எல் தலைவர்  காதர் மொய்தீன் பேட்டியளித்தார்.

கருணாநிதி காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தையும் வரலாற்றையும் மாற்றாமல் திமுக தொகுதிப் பங்கீட்டில் முதல் கையெழுத்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் போடப்பட்டுள்ளது.

இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

மேற்கு வங்கம் மற்றும் அசாமிலும் போட்டியிடுகிறோம்.

நாடு முழுவதும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் தமிழகத்திலும் தனி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். எனவே, சின்னம் குறித்த பிரச்னைகள் எழவில்லை.

இவ்வாறு, பேட்டியில் காதர் மொய்தீன் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

திமுக - மனிதநேய மக்கள் கட்சி (மமக) தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும்.