சுவையான தக்காளி தொக்கு

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 11:10

தேவையான பொருட்கள்: 

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) ,

தக்காளி - 2 (நறுக்கியது) ,

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் ,

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் ,

மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ,

உப்பு - சுவைக்கேற்ப ,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன் ,

சீரகம் - 1/2 டீஸ்பூன் ,

கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகைப் போட்டு தாளிக்கவும். அதன் பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.  பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.  

பிறகு கரண்டியால் தக்காளியை மசித்து விட்டு, 2 நிமிடம் மூடி வைத்து அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும். அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து மசாலா கருகாமல் ஒரு நிமிடம் வதக்கி, பின் கால் கப் நீரை ஊற்றி 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.  தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு தயார்.