தேவையான பொருட்கள் :
இளநீர் வழுக்கை – ஒரு கப் (பொடியாக நறுக்கியது),
மில்க்மெய்டு – மூன்று டீஸ்பூன்,
சுண்ட காச்சிய பால் – ஒரு கப்,
தேங்காய் பால் – ஒரு கப்,
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு கப்,
நெய் – மூன்று டீஸ்பூன்,
முந்திரி – பத்து,
திராட்சை – பத்து,
சாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நன்கு குழைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்டு, பால், தேங்காய் பால், ஏலக்காய் தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு, கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அந்த பாத்திரத்தில் கொட்டி கிளறி பரிமாறவும்.