இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 13:06

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை: 1,56,463 (எண்ணிக்கை உயர்வு 78) ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே  10 லட்சத்து 16 ஆயிரத்து 434 ஆக (நேற்றைய எண்ணிக்கையிலிருந்து உயர்வு 10,584  பேர்) உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா வைரஸ்  பரவல் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு 78 பேர் நேற்று இறந்தனர், இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 1,56,463 ஆக உயர்வடைந்து உள்ளது.

1 கோடியே 07 லட்சத்து 12 ஆயிரத்து 665 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இதுவரை குணமடைந்து உள்ளனர். (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை உயர்வு 13,255 பேர்).

1 லட்சத்து 47 ஆயிரத்து 306 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை குறைவு 2,749 பேர்)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,16,434ஆக உயர்வடைந்து உள்ளது.


இந்தியாவில்  பிற மாநிலங்களில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.