சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 12:04

சென்னை

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து  34 ஆயிரத்து 491 ஆக உயர்ந்தது.

சென்னையில் மட்டும் நேற்றிலிருந்து இதுவரை கோவிட்-19 தொற்று பாதிப்பு புதிதாக 146 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் அண்ணா நகரில் தற்போது 156 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பெறுகின்றனர். அண்ணா நகரில் இதுவரை அதிகபட்சமாக 25,052 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் எந்தந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 பேர்  கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.  இதுவரை 8 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து, குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நிலவரம்:

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,34,491 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 10,209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் தற்போது வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,652 பேர் (நேற்றைய எண்ணிக்கை 1,627 பேர்) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு பெற்று இதுவரை குணம் அடைந்தவர்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 697 பேர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது. சென்னையில் இதுவரை 4,142 பேர் (நேற்றைய எண்ணிக்கை 4,138 பேர்) கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,466 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர்.