நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 11:25

சென்னை:

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது. ஓராண்டு பணி நிறைவு செய்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 – ரூ.29,000 வரை வழங்கப்படும். மேலும், கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 – ரூ.26,000 வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரேசன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.