மும்பை
இன்று பங்குச் சந்தைகளும் நாணயமாற்றுச் சந்தையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட எதிர் நிலைகளை மேற்கொண்டன.
மும்பை பங்குச் சந்தையின் அதிகாரப்பூர்வ குறியீட குறியீடான சென்செக்ஸ் இன்று 1145 .44 புள்ளிகள் சரிந்தன.
தில்லியில் உள்ள தேசியப் பங்குச் சந்தையின் குறியீடாகிய நிப்டி 306 புள்ளிகளை இழந்தது.
கடந்த 5 நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் டில்லி தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன.
ஆனால் ரூபாய் மாற்று நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமையன்று 14 பைசாக்கள் உயர்ந்தன. கடந்த வியாழனன்று இந்திய நாணய மாற்று சந்தை வர்த்தக நேரம் முடிந்த பொழுது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 65 பைசாவாக இருந்தது.
திங்கட்கிழமை ரூபாய் நாணய மாற்று சந்தையில் வர்த்தகம் துவங்கிய பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு 72.58 பைசாவாக இருந்தது. வர்த்தகம்
தொடர்ந்த பொழுது ஒரு கட்டத்தில் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 72 . 29 பைசாவாக உயர்ந்தது.
திங்களன்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.49 பைசாவாக நிறைவடைந்தது.
இதன் மூலம் வியாழனன்று நிலவிய இந்திய ரூபாயின் மதிப்பு 72.65 பைசாவில் இருந்து 16 பைசாக்கள் உயர்ந்து 72 ரூபாய் 49 பைசாவில் நிறைவடைந்தது.