மழைக்காலத்தில் இடம் இல்லை ; நில மசோதாவுக்கு; குளிராவது கைகொடுக்குமா?

பதிவு செய்த நாள்

10
ஆகஸ்ட் 2015
10:40
புதுடில்லி: இந்த கூட்டத்தொடரிலும் நில சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத்திலாவது மசோதாவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் பார்லி.,யை நடத்த விடாமல் காங்., உள்ளிட்ட எதிர்கட்சி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும் அளவில் விவாதம் நடக்கவில்லை. குறிப்பிட்டு சொல்லும்படியான அளவில் மசோதாக்கள் நிறைவேறவில்லை. கடந்த 21 ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் இது வரை ஒரு நாள் கூட அலுவல் நடக்கவில்லை. இன்றும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.


இந்நிலையில் பல முறை அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்ட நிலம் சட்ட திருத்த மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ., அரசு திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக இன்று பார்லி., கூட்டுக்குழு கூட்டம் இன்று விவாதித்தது. ஆனால் இந்த கூட்டத்தை காங்., கட்சி புறக்கணித்தது. மேலும் கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை.


இந்த கூட்டத்தொடரும் வீண்: நாளை ஒரு நாள் மட்டுமே பார்லி., கூட்டம் நடக்கவிருப்பதால் நில சட்ட திருத்த மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் வீணாய்ப்போனது இந்த பார்லி., கூட்டம் அல்ல மக்கள் வரிப்பணம்.