குரு பெயர்ச்சி பலன்கள் – 02–09–2017 முதல் 14.02.2018 வரை ஜோதிடர் – மு.திருஞானம்

மறை மிகு கலை நூல் வல்லோன்
வானவர்க்கரசன் நறை சொரி
கற்பகப் பொன்னாட்டிற்கு அதிபனாய்
நிறை தனம் சிவிகை மண்ணின்
வீடு போகத்தை நல்கும்
இறையவன் குருவியாழன்
பதமலர் பாதம் போற்றி...!


தேவர்களின் ­குரு பிரகஸ்பதி நவகிரகங்களில் வியாழன் என்ற குரு கிரக அந்தஸ்த்து பெற்றவர். நவகிரகங்களில் சுபகிரகங்களின் தலைமை ஸ்தானம் பெற்றவர். அதனால்தான் ‘குரு’ என, இந்த வியாழகிகத்தை குறிப்பிடுகின்றனர். குரு பார்க்க கோடி நன்மை. தோஷ கிரகம் கூட குரு பார்வை பெற்றால் தோஷத்தின் சக்தி குறையும். சிலகிரகங்கள் மங்களம் பெறும். இந்த ஹேவிளம்பி ஆண்டில் ஆவணி மாதம் 17–ம் தேதி செப்டம்பர் மாதம் 2ம் தேதி சனிக்கிழமை வளர்பிறை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் – தனுசு ராசியில் – குருதான் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியிலிருந்து சித்திரை நட்சத்திரம் 3ம் பாதத்தில் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி குருவின் பொதுப்பலன்கள் சாதகமாக உள்ள ராசிகள் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு நற்பலன்கள் வழங்குகிறார்.

சாதகமற்ற நிலையில் உள்ள ராசிகள் : ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் தோஷ பரிகாரம் செய்து கொண்டால் சிரமங்கள் குறையும். 2.09.2017 தொடங்கி துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதம் சுவாதி நட்சத்திரம் நான்கு பாதம் விசாகம் 1,2,3 ஆகிய மாதங்களில் சஞ்சரிக்கிறார். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தை மாதம் 1ம் தேதி வரை சஞ்சரிக்கிறார். அதன் பிறகு விருட்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு – மார்ச் மாதம் 6ம் தேதி வக்ரமாகி மீண்டும் துலாம் ராசிக்கு வருகிறார். அங்கு வக்கிரகதியில் அக்டோபர் மாதம் 4ம் தேதிவரை சஞ்சாரம் செய்கிறார். அதன்பிறகு மீண்டும் வக்ர நிவர்த்தியாகி விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரம் காலில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குரு 5ம் பார்வையாக கும்ப ராசியை பார்க்கிறார். 7ம் பார்வையாக மேஷம் ராசியைப் பார்க்கிறார். 9ம் பார்வையாக மிதுனம் ராசியை பார்க்கிறார். கும்பம், மேஷம், மிதுனம் ராசிகளுக்கு பார்வை பலன்கள் சிறப்பு சேர்க்கும். குருவுக்குரிய சிறப்பு தெய்வம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திதான்! குரு கிரகதோஷ நிவாரணத்திற்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம். குருபகவான் மந்திரத்தை சொல்லி பயன்பெறுங்கள். இனி 12 ராசிகளுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்...

மேஷம் – குடும்ப மேன்மை

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 7ம் இடத்தில் குரு இருப்பதால் குடும்ப மேன்மை சிறப்பாக இருக்கும். தனதான்ய விருத்தி, பொருளாதார மேன்மை, சுபகாரிய அனுகூலம். என இந்த ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் தனலாபம், பதவி உயர்வு என நற்பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் குரு, சந்திரன் பார்வை பரிவர்த்த னை – திருணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வாய்ப்பு வரும். இடமாற்றம், சுகசெளக்யம் என நற்பலன்கள் மிகுந்து இருக்கும்.

குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதரர் மேன்மை, எதிர்பாராத செலவு என பலன்கள் இருக்கும். உறவுகள் மேம்படும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் தரும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். 2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் குரு சஞ்சரிக்கும்பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது மேஷ ராசி அதிபன் என்பதால் செவ்வாய் சாரபலன்கள் சுமாராகவே இருக்கும். தாயார் தேக ஆரோக்யகத்தில் கவனம் தேவைப்படும். போக்குவரத்து, வாகனம் போன்ற விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை. வீண் அலைச்சல், தேக ஆரோக்யகுறை என சிரமம் தரும். 05.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவா தியின் சாரம்பெற்று சஞ்சரிப்ப தால் எலக்ட்ரானிக் சம்பந்தப் பட்ட பொருட்கள் ரிப்பேர் செல வினங்கள் வரும்.

போக்குவ ரத்தில் முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். நவம்பர் 20ம் தேதி வரை இந்த சூழ்நிலை இருக்கும். 20.11.2017 தொடங்கி குரு, தனது நட்சத்திரம் விசாகத்தின் சாரம் பெற்று சுயச்சார சஞ்சாரம் செய்யும்பொழுது குடும்பத்தில் சுபிட்சமான சூழ்நிலை வரும். சுபகாரிய அனுகூலம், குடும்ப மேன்மை, தனலாபம், பொருளாதார முன்னேற்றம் என நற்பலன்கள் 14.02.2018 வரை நீடிக்கும். மொத்தத்தில் குருவின் நற்பலன் கள் முற்பகுதியை விடபிற்பகுதி யில் சுபிட்சமாக இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். வீண் அலைச்சல் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். நிதி நிலைமை வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள், கடின உழைப்பு, லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : விடாமுயற்சி வெற்றி தரும். கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் இருக்கும். வீண் அலைச்சல் சிரமப்படுத்தும். கலை,இலக்கியம்முன்னேற்றம் பெறும். விைளயாட்டு போட்டிகளில் விடாமுயற்சி பலன் தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் சிரமம் கூடினாலும் அதற்குரிய பலன்கள் மிகுந்து இருக்கும். கால்நடை விருத்தி, நிதி நிலைமை சீராகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சூழ்நிலை அனுசரிப்பது உத்தமம்.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிரமம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. ஆண்டின் முற்பகுதியை விட பிற்பகுதி சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

ரிஷபம் – இறையருள் கிட்டும்

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாராக இருந்தாலும் பார்வை பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குரு இருப்பதால் தேவைகள் அதிகரிக்கும். அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். சிக்கல் வரும். குடும்பத்தில் முடிந்தவரை பொறுமையுடன் அனுசரித்து போவது நன்மை தரும். வீண் கவலை வரும். தவிர்த்துவிடுங்கள். தன்னம்பிக்கையுடம் செயல்படுங்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் பணிச்சுமை கூடும். பொறுப்புகள் அதிகமாகும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவுகள் வரும். புதிய பொருள் சேர்க்கை, அயன சயன போகம் சிறப்பாக இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் பதிவதால் வாக்கு, தனம், குடும்பம் முன்னேற்ற மாக இருக்கும். சுக ஜீவனம், சுக போஜனம், தனவிருத்தி என நற்பலன்கள் இருக்கும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது சிறப்பான பலன்கள் தரும். ராசிக்கு 3ல் இருக்கும் செவ்வாய் சார பலன் தனலாபம், விரோதிக ளை வெல்லுதல், இறையருள், ஆன்மிக ஈடுபாடு என நற்பலன்கள், சார பலன்களாக இருக்கும். 5.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதி யின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் கூடும் எலக்ட்ரானிக் பொருள் சேர்க்கை, எதிர்ப்புகள் விலகல் என நற்பலன்கள் இருக்கும். அத்துடன் வளர்ப்புபிராணிகள் சேர்க்கை, கால்நடை விருத்தி, சுகஜீவனம் கடன் தீருதல், தேக ஆரோக்யம் என நற்பலன்கள் இருக்கும். அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயசாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது சிரமமான பலன்களே இருக்கும். அவசரத் தேவைக்கு கடன் வாங்குதல், வீண் பிரச்னை களில் தலையிட்டு கவலைப்படுதல் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையில் அனுசரித்து செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கை அம்மன் வழிபாடு உத்தமம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு குரு இந்த ஆண்டு சிறப்பு அனுகூலம் சேர்ப்பார். உற்பத்தி திறன் அதிகரிக்கும், லாபம் பெருகும். வியாபாரத்தில் முதலீடு பெருகும். கடின உழைப்பு இருந்தாலும் லாபகரமான சூழ்நிலை நிலவும்.

கல்வியாளர், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி வசதி வாய்ப்புகள் கூடும். புதிய முயற்சி அனுகூலமாகும். கலை, இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பயண அலைச்சல் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். சுபச் செலவினங்கள் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிறப்பு கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை சுபகாரிய ஈடுபாடு, மகிழ்ச்சி தரும். இடமாற்றம் நன்மை தரும். உறவுகள் மேம்படும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை வரும். குழந்தைகள் கல்வி முன்னேற்றம் தரும்.

மிதுனம் – செல்வம் செல்வாக்கு பெருகும்

இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குருவின் பார்வை நற்பலன்களை தரும். குருவின் பொதுப்பலன்கள் – ராசிக்கு 5ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு சுப பலன்கள் மிகுந்திருக்கும். ஆண்டு முழுவதும் செல்வம் செல்வாக்கு பெருகும். திருமணம் போன்ற சுபகாரிய ங்கள் அனுகூலமாகும். புத்திரபாக்யம் கிட்டும். பொருருளாதார மேன்மை என நற்பலன்கள் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் வியாபாரம் தொழில் ரீதியாக முதலீடு பெருகும். தீர்த்தயாத்திரை செல்லுதல், கோயில் திருப்பணி ஆன்மிக ஈடுபாடு என நற்பலன்கள் இருக்கும் குருவின் 7ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் தனலாபம், பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசியில் பதிவதால் குரு சந்திரனை பார்த்து சுபகாரிய அனுகூலம் திருமணம் ஆகாத வர்களுக்கு திருமண வாய்ப்பு வரும். இடமாற்றம், சுகசெளக்யம் பெருகும். சுபச்செல வினங்கள் வரும். பூர்விக சொத்து விவகாரம் அனுகூலம் பெறும்.

2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திரம் சாரம் பெறுவது உத்தம மில்லை. எதிரித்தொல்லை, முன்கோபம், அக்னி அபாயம், திருட்டு பயம், அரசு காரியத் தடை என இந்த காலகட்டத்தில் சிரமம் இருந்தாலும் இது 5.10.2017 வரைதான் நீடிக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். 5.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை, எதிர்பாராத செலவு, திருட்டு பயம் என இந்த காலகட்டத்தில் சாரபலன் சிரம பலனாகவே இருக்கும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரி க்கும் பொழுது, குருபலன் சிறப்பாக இருக்கும். சுபகாரிய அனுகூலம் புத்திர பாக்யம், பூர்விக சொத்து அனுகூலம், குழந்தைகளால் மகிழ்ச்சி பணவரவு என நற்பலன்கள் இருக்கும். ஆண்டின் முற்பகுதி சிரமமாக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். பராமரிப்பு செலவினங்கள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு, பயண அலைச்சல் சிரமப் படுத்தும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். கலை, இலக்கியம் முன்னேற்ற மாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி நற்பலன்கள் தரும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் முன்னேற்றமாக இருக்கும். கடின உழைப்பு அலைச்சல் மிகுந்திருந்தாலும் – நிதிநிலைமை சீராக இருக்கும். கால்நடை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும்.

பெண்களுக்கு : குடும்பப் பணிகளில் சிரமம் அதிகரிக்கும். உடல் சோர்வு, மனச்சோர்வு இருக்கும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன்கள் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.

கடகம் – அயன சயன போகம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொதுப்பலன்கள் சுமாராக இருந்தாலும், பார்வை பலன் களும், சார பலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 4ம் இடத்தில் குருசஞ்சாரம் உங்களு க்கு சுகஸ்தானம் என்பதால் அதில் சிரமங்கள் இருக்கும். எதிர்பாராத வீண் வெளியூர் பயண அலைச்சல், சுகமின்மை, உறவினர்களிடையே மனக்கசப்பு தாயார் தேக ஆரோக்யக்குறை வாகனம், போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. ஆடம்பர செலவினங்கள் இருக்கும். இந்த நிலை ஆண்டு முழுவதும் இருக்கும். எனவே சூழ்நிலை அனுசரித்து செயல்படுவது உத்தமம். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் நோய் நீங்கும். ஆயுள் விருத்தியாகும். தேக ஆரோக்யம் பலமாகும். இந்த நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் பதிவதால் செய்யும் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு, பணச்செலவு அயன, சயன, போகம் என பலன்கள் இருக்கும்.

2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி, சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குருசஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது சிரம பலன்தான் இருக்கும். தேக ஆரோக்யக்குறை, எதிரித்தொல்லை, காரியத்தடை என சூழ்நிலைகள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் உறவினர் பகை, தேக ஆரோக்யக்குறை, வெளியூர் பயணம், அக்னி அபாயம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து முன்னெச் சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். இதை அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அவசியமற்ற வெளியூர் பயணம். உறவினர்கள் மனக்கசப்பு தேக ஆரோ க்யக்குறை என சிரமங்கள் இருக்கும். போக்குவரத்தில் முன்னெச்ச ரிக்கை வேண்டும். வியாழக் கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். செவ்வாய் கிழமை ராகுகால துர்கை வழிபாடு ராகுவின் சிரமங்களுக்கு பரிகாரமாகும்

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: தொழில் சார்ந்த விஷயங்களில் கடின உழைப்பு, அலைச்சல் என சிரமங்கள் இருந்தாலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும். முதலீடு பெருக்கம், உற்பத்தி திறன் கூடுதல் புதிய தொழில் முயற்சி அனுகூலம் என நற்பலன்கள் இருக்கும்.

கல்வியாளர்கள்,மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற் றம் வரும். லாபகரமான விஷயங் கள் அனுகூலமாகும். இலக்கியம் கலை, மேன்மையாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். புதிய முயற்சிக ளில் அனுகூலம் கிட்டும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். அலைச்சல் மனச்சோர்வு இருந்தாலும் – நிதி நிலைமை சீராகும். புதிய முயற்சிகள் கைகூடும். கால்நடை விருத்தியாகும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு: குடும்பப் பணி களில் சிரமம் கூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியா கும். புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு நற்பலன் தரும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். சேமிப்பு உயரும்.

சிம்மம் – சுபகாரிய அனுகூலம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொதுபலன்கள் சுமாராக இருந்தாலும், பார்வை பலன்களும், சாரபலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 3ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு தைரி யஸ்தானம் என்பதால் அதில் சிரமங்கள் இருக்கும். தொழில் ரீதியான சிரமங்கள், கடின உழைப்பு இருக்கும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதம் சிரமம் தரும். காரியத்தடை வீண் அலைச்சல் என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டால் சிரமங்கள் குறையும். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு சிரமப்பரி காரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம் கிட்டும். தொழில் அபிவிருத்தி காரிய அனுகூலம் என்று நற்பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் தொழில் முன்னேற்றம் முதலீடு பெருகுதல், தீர்த்த யாத்திரை செல்லல், திருப்பணி செய்தல் என சுபபலன்கள் மிகுந்திரு க்கும். குருவின் 9ம் பார்வை 11ம் இடத்தில் பதிவதால் பணவரவு, தனலாபம், பதவி உயர்வு, குடும்ப மேன்மை என நற்பலன்கள் மிகுந்திருக்கும். ஆண்டு முழுவதும் நற்பலன் உண்டு.

2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது எதிர்பாராத செலவினங்கள், கண் சம்பந்தப்பட்ட உபாதை, பித்த உபாதை என சிரமங்கள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் பணவிரயம், தூக்கமின்மை, அலைச்சல் மனக்குழப்பம் என சிரமங்கள் இருக்கும். முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். அடுத்து குரு 20.11.2017 தொட ங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்ப பிரச்னைகள் சிரமம் தரும். தொழில் ரீதியான பணிச்சுமை சிரமம் தரும். காரியத்தடை, கொடுக்கல் வாங்கலில் சிரமம் என சூழ்நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்ப டுவது சிரமங்களை குறைக்கும். முன் கோபத்தை தவிர்ப்பது உத்தமம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சிரமங்களை குறைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில்ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பு, அலைச்சல் இருக்கும். உங்கள் புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உற்பத்திதிறன் கூடும். வியா பாரத்தில் கடின உழைப்பு அலைச்சல் இருந்தாலும் உங்கள் பேச்சு சாதூர்யத்தால் லாபம் பெருகும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் மேன்மை கிட்டும். கலை, இலக்கியம் மேன்மை தரும். உங்கள் பேச்சுத்திறன் கூடும். விளையாட்டு, போட்டிகளில் வெற்றி கிட்டும். உங்கள் முயற்சிகள் அனுகூலமாகும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். நிதி நிலைமை சீராகும். கால்நடை விருத்தியாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு: வாக்கு, தனம், குடும்ப சூழ்நிலைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பப்பணி பாராட்டு பெறும் வகையில் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை நினைத்த காரியம் கை கூடுதல் என நற்பலன்கள் இருக்கும்.

கன்னி – பொருளாதார மேன்மை

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொதுப்பலன்கள், பார்வை பலன்கள் சாரபலன்கள் நன்றாக இருக்கும். ராகு லாபஸ்தானம், சனி 3ம் இடத்தில் என சிறப்பு பலன்களும் இருப்பதால் திட்டமிட்டு செயல்படுங்கள் முன்னேற்றம் வரும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குரு சஞ்சாரம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம் சிறப்பாக இருக்கும். வாக்கினால் வளமும், நலமும் பெருகும். உங்கள் பேச்சுக்க மரியாதை கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பகை வெல்லுதல், தனவிருத்தி, குடும்ப மேன்மை என நற்பலன்கள் ஆண்மிக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு சுபிட்சமாக இருக்கும். ஆடம்பர செலவினங்கள் இருக்கும். தேக ஆரோக்யக்குறை, குடும்பதேவைக்கு கடன் வாங்குதல் என பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யம் முன்னேற்றமாகும். நோய் விலகும். ஆயுள் விருத்தி என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் பதிவதால் தொழில்ரீதியான பணிச்சுமை கூடும். வீண் பிரச்னைகள் வரும். பொறுமையுடன் அனுசரிப்பது உத்தமம்.

2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது பணவரவுகள் மிகுந்திருக்கும். சுகசெளக்யம் மிகுந்திக் ருகும். புதிய பொருள்சேர்க்கை மகிழ்ச்சி தரும். இந்த சூழ்நிலை இருக்கும் பொழுது திட்டமிட்டு செயல்படுங்கள் சேமிப்பு உயரும். அடுத்து குரு 5.10.2017 முதல் ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று நற்பலன்கள் வழங்குவார். எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் நன்றாக இருக்கும். தனலாபம், சுகசெளக்யம் மிகுந்தி ருக்கும். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும்பொழுது உங்களுக்கு குடும்ப, பொருளாதார மேன்மை, வாக்கினால் வளம், நலம் சேரும். அலைச்சல் மிகுந்தி ருக்கும் ஆதாயமாக சூழ்நிலை இருக்கும். சுபச்செலவினங்கள் மிகுந்தி ருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்ட மிட்டு செய ல்படுங்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாக இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதியான சூழ்நிலைகள் விருத்தி யாகும். லாபம் பெருகும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். நிதிநிலைமை கூடும். இடமாற்றம், வியாபார விருத்தி – மூலதனப் பெருக்கம் என நற்பலன்கள் மிகுந்திருக்கும். போட்டிகள் வியாபாரத்தில் சிரமம் தரும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் சிறப்பு கவனம் தேவைப்படும். விடாமுயற்சி முன்னேற்ற ம் தரும். கலை, விளை யாட்டு போட்டிகளில் கடின உழைப்பு, விடாமுயற்சி நற்பலன் தரும். சூழ்நிலை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகள் முன்னேற்றமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள் லாபம் தரும். பொருளாதார சூழ்நிலைமுன்னேற்றமாக இருக்கும்.

பெண்களுக்கு : குடும்பப் பணிகளில் சிரமம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சி அனுகூலம் தரும். புதியபொருள் சேர்க்கை, வீடுமனை யோகம் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு செயல் படுவது உத்தமம்.

துலாம் – குடும்ப மகிழ்ச்சி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.பொதுப்பலன் கள் சுமாராக இருந்தாலும் பார்வை பலன்கள், சார பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசியில் குரு சஞ்சாரம் சூழ்நிலை மாற்றத்தை கொடுக்கும். குழப்பமான சூழ்நிலைகள் சிரமப்படுத்தும். எதிலும் மந்தநிலை இருக்கும். வீண் பிரச்னைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பும் இருக்கும். பாராட்டு கிடைக்கும். ஆண்டு முழுவதும் இந்த பலன்கள் இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் புத்திர பாக்யம், அனுகூலம், என நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி, குடும்ப மகிழ்ச்சி என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் தொழில் ரீதியான முதலீடு பெருகும். தீர்த்தயாத்திரை செல்வது, திருப்பணி செய்தல் 2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது செய்யும் தொழில் ரீதியான வருமானங்கள் பெருகும். தொழில் முன்னேற்றமிருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான சிரமங்கள் கடின உழைப்பு இருக்கும். தேக ஆரோக்யக்குறை இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். சிரமங்களை குறைக்கலாம்! இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலை மாற்றம், மனக்குழப்பம், மந்த நிலை வீண் மனக்கவலை என சூழ்நிலை இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பு, பராமரிப்பு சிரமங்கள் ரிப்பேர் செலவினங்கள் என இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் வியாபாரத்தில் கடின உழைப்பு பயண அலைச்சல், போட்டி என சிரமங்கள் இருந்தாலும் லாபம் கூடும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். உங்கள் செயல்பாடு புத்திசாலித்த னமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். உயர்கல்வி வசதி வாய்ப்பு கூடும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணியில் கூடுதல் சிரமம் இருந்தாலும் பலன்கள் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை முன்னேற்றமாக இருக்கும். கால்நடை பராமரிப்பு செலவுகள் கூடும். வெளியூர் பயண அலைச்சல் மிகுந்திருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமங்கள் கூடும். புதிய பொறுப்புகள் அதிகமாகும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை கூடும். ஆடம்பரமான விஷயங்க ளில் ஈடுபாடு அதிகமாகும். வெளியூர் பயண அலைச்சல், எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும்.

விருச்சிகம் – வரவுக்கு ஏற்ப செலவுகள்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நன்றாக இருக்கும். பொதுப்பலன்கள் சுமாராக இருந்தாலும் பார்வை சார பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்ப லன்கள் ராசிக்கு 12ம் இடத்தில் குரு சஞ்சாரம் சுபச்செலவினங்கள் இருக்கும். சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்பா ராத செலவினங்கள் என சிரமப்பலன்களே ஆண்டு முழுவதும் குருவின் பலன்கள் இருக்கும். ஆனாலும் குருவின் பார்வை பலன்கள் நன்றாக இருக்கும். வியாழக்கி ழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழி பாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். ஞாபகசக்தி பெருகும். தனவிருத்தி, பணவரவுகள் என நற்ப லன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யக்குறை, நெருக் கடி செலவுக்கு கடன் வாங்குதல், வீண் அலைச்சல் மனச்சோர்வு என சிரமங் கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யம் முன்னேற்றம் பெறும். ஆயுள் விருத்தி நோய் விலகும் என நற்பலன்கள் இருக்கும்.

செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது தேக ஆரோக்ய குறை, கைப்பொருளை தவற விடுவது, காரியத்தடை என சிரமங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும்.அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான சூழ்நிலை பணிச்சுமை கூடும். எதிரித் தொல்லை கூடும். காரியத்தடை, யாருக்கேனும் கட்டுப்படுதல், போன்ற சிரமங்கள் சார பலன்களாக இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சிரம பலன்கள் இருக்கும். வீண் செலவுகள், தூரதேச பயணம், அலைச்சல், சூழ்நிலை மாற்றம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமங்கள் குறையும். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி வழிபாடு – செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை யம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாகும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்க ளுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளைத் தரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உற்பத்தித்திறன் அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டி சிரமம் தந்தாலும் லாபம் பெருகும். வியாபார விருத்தியாகும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை நில வும். கலை, இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை – விடாமுயற்சி அவசியம் தேவை.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் வரும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். பொருளாதார மேன்மை, உறவுகள் மேன்மை, கால்நடைவிருத்தி என நற்பலன்கள் இருக்கும்.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். வீடு, மனை, யோகம் கிட்டும். குடும்பப் பணிகளில் முன்னெச்ச ரிக்கை தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிப்பு உயரும்.

தனுசு – வீடு, மனை, லாபம்

இந்த குருப்பெ யர்ச்சி உங்களுக்கு லாபகரமாக இருக்கும். பொதுப்பலன்கள், பார்வை பலன்கள் சிறப்பாக இருக்கும். குருவின் பொதுப்பல ன்கள் ராசிக்கு 11ம் இடத்தில் குரு சஞ்சாரம் – லாபகரமாக இருக்கும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திட்டமிட்ட விஷயங்கள் அனு கூலமாகும். பணவரவுகள், தனலாபம், வீடு, மனை போன்ற விஷயங்களில் லாபம் என பொருளாதார முன்னேற்றம் ஆண்டு முழுவதும் இருக்கும்.குருவின் 5ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதரர் மேன்மை, உறவுகள் மேன்மை, தனவிரயம் என பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் அனுகூலமாகும். குழந்தை இல்லாதவர்களு க்கு புத்திரபாக்யம், குழந்தைகள் முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி, பண வரவுகள் என நற்பலன்கள் இருக்கும்.

செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். பொறுமையு டன் அனுசரிப்பது உத்தமம். தேகஆரோக்ய குறை கைப்பொருளிழப்பு என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது முயற்சிகளில் தடை, உறவினர் மனக்கசப்பு, பிரிவு, குடும்பத்தை விட்டு தனியே வெளியூர் பயணம் செல்லுதல் என்று சிரமங்கள் தொடரும். பொறுமையு டன் சூழ்நிலையை அனுசரியுங்கள். 20.11.2017 வரைதான் சிரமம். அதன்பிறகு உங்கள் ராசிநாதன் குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் 1,2,3 ஆகிய பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சூழ்நிலை லாபகரமாக அமையும். நீங்கள் நினைத்தது நடக்கும், தனலாபம், பணவரவுகள் கூடும். வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாகும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் சார்ந்த விஷயங்கள் சிரமம் தரும். கூட்டாளிகள் மனக்கசப்பு வரும். எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். பராமரிப்பு செலவுகள் கூடும். வியாபாரத்தில் கடின உழைப்பு, வீண் அலைச்சல், பண நெருக்கடி என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து முன்னெச்சரிக்கையு டன் செயல்படுவது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வி யாளர்களுக்கு முன்னேற்றம் மிகுந்திருக்கும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலை, இலக்கியம், முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி தரும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கால்நடை விருத்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயண அலைச்சல், தேக ஆரோக்யக்குறை சிரமம் தரும். திட்டமிடல் அவசியம் தேவை.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமம் கூடும். அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடி தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. திட்டமிட்டு குடும்ப பணிகளில் ஈடுபடுவது சிரமம் குறையும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம் – சவாலே சமாளி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். பொதுப் பலன்களை விட பார்வைப் பலன்கள் சிறப்பாக இருக்கும். குரு ராசிக்கு 10ம் இடத்தில் துலா ராசியில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான உபாதைகள் சிரமங்கள் இருக்கும். கடின உழைப்பு மேலதிகாரி அணுசரணையற்ற சூழ்நிலை பணவிரயம் கடன் வாங்கி சமாளிக்கும் சூழ்நிலை என ஆண்டு முழுவதும் இந்த சிரம பலன் இருக்கும்.குருவின் 5ம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்தில் பதிவதால் தன விருத்தி, சுகஜீவனம், சுகபோஜனம் என நற்பலன்கள் இருக்கும். கடின உழைப்பு மேலதிகாரி அனுசரணையற்ற சூழ்நிலை – பணவிரயம் – கடன் வாங்கி சமாளிக்கும் சூழ்நிலை என ஆண்டு முழுவதும் இந்த சிரம பலன் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி, சுகஜீவனம், சுகபோஜனம் என நற்பலன்கள் இருக்கும்.குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி – கல்வியில் முன்னேற்றம் புத்திசாலித்தனம் என்று நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யக்குறை, நோய் உபாதை, கடன் வாங்குதல் என சிரம பலன்கள் சவாலாகவே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

செப்டம்பர் மாதம் 2ம் தேதி குரு, கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செவ்வாய் சாரம் பெறுவதால் சாரபலன் தேக ஆரோக்யக் குறை குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் எதிரித்தொல்லை, கூட்டாளி கள் இணக்கமின்மை, வீண் குழப்பம் என சிரமபலன்கள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதி நட்சத்திரக் காலில் சஞ்சரிப்பதால் ராகு சாரபலன் சிரமமாகவே இருக்கும். காதல் விவகாரங்களில் தொல்லை, சிரமம் இருக்கும். கூட்டாளிகளுடன் மனக்கசப்பு, தூரதேசம், வெளியூர் பயணம் செல்லுதல் என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான சிரமங்கள், கடின உழைப்பு இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை நீடிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு உத்தமம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமா கவே இருக்கும். நிதி நிலைமை முன்னேற்ற மாகும். உற்பத்தி திறன் கூடும். பராமரிப்பு செலவினங்கள் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வி யில் கவனச்சிதறல் தடையாகும். விடாமுயற்சி மேன்மை தரும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம்தேவை.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். நிதி நிலைமை உயரும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு செலவினங்கள் சிரமப்படுத்தும். வெளியூர் பயண அலைச்சல், தேக ஆரோக்யக் குறை சிரமப்படுத்தும்.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். குடும்பத்தில் ஒற்றுைம நிலவும். குழந்தைகள் முன்னேற்றம், சுகபோகம், சுபகாரிய ஈடுபாடு என நற்பலன்கள் இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தி யாகும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.

கும்பம் – சுபிட்சம் பெருகும்

இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நற்ப லன்க ளை வழங்கும். பார்வை பலன்களும் சார பலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் குரு ராசிக்கு 9ம் இடத்தில் துலாராசி சஞ்சாரம் உங்களுக்கு சுப பலன்களை வழங்குவார். நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தி னருடன் உறவினர் சுற்றம் சூழ மகிழ்ச்சியு டன் இருக்கும் சூழ்நிலை வரும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வெளியூர் பயணம், வெளிநாடு பயணம் என சிலருக்கு சுபிட்சமாக சூழல் வரும். இந்த பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 5ம் இடத்தில் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் குரு சந்திர யோகம் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம் கிட்டும். இடமாற்றம் சுகசெளக்யம் என இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதர மேன்மை, சுபச்செலவினங்கள் என பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் பூர்வீக சொத்து அனுகூலம், புத்திரபாக்யம் என சுபபலன்கள் இருக்கும்.

செப்டம்பர் மாதம் 2ம் தேதி குரு கன்னி ராசியிலிருந்து – துலாம் ராசிக்கு சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதத்தில் செவ்வாய் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் கடன் தீருதல், பூமி லாபம், பொன் பொருள் சேர்க்கை என பொருளாதார முன்னேற்றம் வரும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு ராகு நட்சத்திரம் சுவாதியின் சாரம் வாங்கி சஞ்சரிக்கும் பொழுது எதிர்ப்புகள் விலகும். நீண்டகால கடன் பிரச்னை தீரும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். இந்த நற்பலன்கள் 20.11.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் சுற்றம்சூழ மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நிலை வரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுபகாரிய ஈடுபாடு, சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வரும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு விருச்சிக ராசி பெயர்ச்சியாகிறார். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் வழிபாடு சிரமப் பாரிகாரமாகும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். நிதி நெருக்கடி இருக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். வியாபாரத்தில் கடின உழைப்பு, அலைச்சல் இருக்கும். போட்டிகள் சிரமப்படுத்தும். உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, முன்னேற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். செலவுகள் அதிகரிக்கும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி முழு ஈடுபாடு வெற்றி தரும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு தேவைப்படும். காரியத்தடை பராமரிப்பு செலவுகள், பணத்தேவை என சிரமங்கள் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பயண அலைச்சல் சிரமப்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமம் அதிகரிக்கும். பணத்தேவை நெருக்கடி தரும். சேமிப்பு குறையும். தேக ஆரோகயத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தில் உறவினர்களிடம் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். ஆண்டின் பிற்பகுதியில் நற்பலன்கள் அதிகமாகும். காரிய சித்தியாகும்.

மீனம் – தன்னம்பிக்கை வெற்றியாகும்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாராகவே இருக்கும். ஆனாலும் பார்வை பலன்களும், சார பலன் ஓரளவு நற்பலன் தரும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 8ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு சிரம பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். யாருக்கும் ஜாமீன் கை யெழுத்து போட வேண்டாம். சிக்கல் வரும். காரியத்தடை, தேக ஆரோக்யக் குறை, பணச்சிரமம், சேமிப்பு கரைதல் என்று சிரம பலன்கள் இருக்கும். முன்னெச்ச ரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள். சூழ்நிலையை அனுசரித்து செயல்பட்டால் சிரமங்கள் குறையும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு, எதிர்பா ராத செலவினங்கள் வரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 2 இடத்தில் பதிவதால் தனவிருத்தி, சுகஜீவனம், சுக போஜனம், நல்விருந்து என்று நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி, பொருளாதார மேன்மை கல்வியில் நல்ல முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.

செப்டம்பர் மாதம் 2ம் தேதியிலிருந்து குரு சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் சஞ்சரிப்பதால் செவ்வாய் சார பலன்கள் சிரமம் தரும். எதிரிகள் தொல்லை – தேக ஆரோக்யக்குறை, புத்திரர்கள் பற்றிய கவலை என சிரம பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் காலில் சஞ்சரிக்கும் பொழுது – ராகு சார பலன்கள் மனக்குழப்பம், மனக்கவலை, குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லுதல் என சிரம பலன்கள் 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிக்கும் பொழுது சிரம பலன்கள் இருக்கும். யாருக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். சிக்கல் வரும். காரியத்தடை, தேக ஆரோக்யக்குறை என சிரமம் வரும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களு க்கு சாதகமாக இல்லாததால் வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் ஸ்ரீ துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் நன்மை தரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலை சுபிட்சமாக இருக்கும். நிதி நிலைமை மேன்மையடையும். உற்பத்தி திறன் கூடும். அனுகூலமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். லாபம் பெருகும் வியாபாரம் விருத்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வி யில் நல்ல முன்னேற்றம் வரும். புத்திசாலித்தனம் கூடும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டி வெற்றி தரும். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அனுகூல பலன் தரும்.

விவசாயிகளுக்கு : விவசாயப் பணி முன்னேற்றம் பெறும். தன, தான்ய விருத்தி லாபம் தரும். நிதி நிலைமை உயரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கால்நடை விருத்தி லாபம் தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். புதிய பொன், பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு நன்மை தரும். சேமிப்பு உயரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை..