ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2017 - ஜோதிடச்சுடர் ந.ஞானரதம்

ஆங்கிலப் புத்தாண்டு – வளர்பிறை – திரிதியை திதி – திருவோணம் நட்சத்திரம் – அமிர்தயோகத்தில் துவங்குகிறது. புத்தாண்டு அனைவருக்கும் புதுப்பொலிவை தரும். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பன்னிரெண்டு ராசிகளுக்குரிய 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்களை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு ஜூலை மாதம் ராகு – கேது பெயர்ச்சியும், செப்டம்பர் மாதம் குருப்பெயர்ச்சியும் – டிசம்பர் மாதம் சனிப் பெயர்ச்சியும் வருகிறது! எனவே இதன் அடிப்படையில் உங்கள் ராசி பலனை தெரிந்துகொண்டு சூழ்நிலையை அனுசரித்து செயல்படுங்கள்...

மேஷம்

ஒரு­வரை பார்த்­த­வு­டனே அவ­ரைப்­பற்­றிய விவ­ரங்­களை துல்­லி­ய­மாக கணித்து விடும் ஆற்­றல் மிக்க மேஷ ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது­ப­லன்­கள் : சென்ற ஆண்­டில் நீங்­கள் அஷ்­டம சனி­யின் பிடி­யி­லும் அது­மட்­டு­மல்­லா­மல் குரு­வும் எதிரி ஸ்தான­மான ஆறாம் இடத்­தி­லும் இருந்து கொண்டு உங்­க­ளைப்­ப­டா­த­பா­டு­ப­டுத்­தி­விட்­டார்­கள். அந்த நிலை இந்த ஆண்டு இல்லை. அஷ்­டம சனி இந்த ஆண்டு இறு­தி­யி­லும் குரு வரு­ட­பிற்­ப­கு­திக்கு பின் யோக­கா­ர­னா­க வரு­வ­தால் சென்ற ஆண்டை விட உங்­க­ளுக்கு இரட்­டிப்பு மகிழ்ச்­சியே உண்­டா­கும். குரு தங்­கள் ராசி­யை­யும் பார்க்க ஆரம்­பித்து விடு­வார் ஆத­லால், இனி உங்­கள் உள்­ள­மும் உட­லும் புதுப் பொலி­வு­ட­னும் மிடுக்­கான தோற்­ற­மு­டன் உலா­வ­ரு­வீர்­கள். தொழில் ஸ்தானா­தி­ப­தி­யான சனி­ப­க­வான் தனுசு ராசிக்கு இடம் பெயர்­வ­தா­லும் குரு சப்­தம ஸ்தானத்­தில் வரு­வ­தா­லும் குடும்ப வாழ்க்கை, தொழில், உத்­யோ­கம் போன்­ற­வற்­றில் இருந்த சில பிரச்­சி­னை­கள் காணா­மல் போகும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உயர் அதி­கா­ரி­கள் மற்­றும் உங்­கள் சக பணி­யா­ளர்­கள் உங்­க­ளு­டன் சுமூ­க­மா­க­வும் பழகி வரு­வ­தன் மூலம் உங்­கள் பணி­க­ளில் எவ்­வித குறை­பா­டும் ஏற்­பட வாய்ப்­பில்லை. ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்­ற­வற்றை எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­கள் விரும்­பி­ய­ப­டியே பெற்று மகிழ்­வீர்­கள். சிலர் பணி­யில் இருந்து கொண்டே தனிப்­பட்ட முறை­யில் துணைத் தொழில் ஒன்றை துவங்கி நடத்தி பெரும் பொருளை ஈட்டி மகிழ இட­முண்டு. வியா­பா­ரி­க­ளுக்கு : சென்ற ஆண்­டில் ஏற்­பட்ட நஷ்­டங்­களை ஈடு­கட்­டும் வகை­யில் வியா­பா­ரம் மிகச்­சி­றப்­பாக நடை­பெ­றும். உங்­க­ளுக்கு போட்­டி­யாக இருந்து கொண்டு தொல்­லை­கொ­டுத்து வந்­த­வர்­கள், இனி நம்­மால் வீம்­புக்கு இரை­யாக முடி­யாது என அவர்­க­ளா­கவே முடி­வெ­டுத்து, தங்­கள் வியா­பார நிலை­யத்தை வேறு இடத்­திற்கு மாற்­றிக் கொள்­வார்­கள். கூட்­டுத் தொழில் செய்து வரு­ப­வர்­கள் தங்­கள் கூட்­டா­ளி­யி­டம் மிகச் சரி­யாக நடந்து கொண்டு அவர்­களை மகிழ்­வித்து நீங்­க­ளும் மகிழ்­வீர்­கள்.

பெண்­க­ளுக்கு : குடும்ப நிர்வா ­கத்­தில் உங்­கள் பொறுப்­பு­க­ளைச் மிகச் சிறப்­பாக நிறை­வேற்றி அனை­வ­ரின் பாராட்­டு­க­ளை­யும் பெறு­வீர்­கள். வீட்டிற்கு தேவை­யான பொருள்­களை வாங்கி வீட்­டி­னரை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­து­வீர்­கள். ஆல­யங்­க­ளுக்­குச் சென்று நேர்த்­திக் கடன்­களை நிறை­வேற்­றும் பொறுப்பு சில­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டும். மகள் அல்­லது மரு­ம­க­ளின் பிர­ச­வ­கால பணி­க­ளில் நீங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய நிர்­பந்­தம் ஏற்­ப­டும். அடகு வைத்­தி­ருந்த நகை­களை மீட்­டு­வீர்­கள். திரு­ம­ண­வ­யது அடைந்­தும் இது­வரை பல கார­ணங்­க­ளால் தடை­பட்டு வந்த உங்­கள் பிள்­ளை­க­ளின் திரு­ம­ணம் இப்­போது இனிதே நடை­பெறும். கண­வன் மனை­வி­யி­டையே சுமூ­க­மான மன­நிலை நிலவி குடும்ப முன்­னேற்­றத்­தி ற்­குப் பல திட்­டங்­களை தீட்டி மகிழ்­வீர்­கள். மண­மாகி நீண்­ட­கா­லம் மகப்­பேறு கிடைக்­காத தம்­ப­தி­கள் இப்­போது உங்­கள் மடி­யில் மழ­லைச் செல்­வத்தை இட்டு கொஞ்சி மகிழ்­வீர்­கள். சகோ­தர, சகோ­தரி வழி­யில் நட்­பு­றவு பலப்­ப­டும்.

கலை­ஞர்­க­ளுக்கு : இந்த ஆண்டு தங்­க­ளுக்கு பொற்­கா­ல­மாக அமை­யும். உங்­கள் திற­மை­களை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்தி ரசி­கர்­க­ளின் பேரா­த­ர­வைப் பெறு­வீர்­கள். புதிய வாய்ப்­பு­க­ளின் மூலம் உங்­கள் வரு­மா­னம் பன்­ம­டங்கு பெரு­கும். ரசி­கர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மாக உயர்ந்து மனம் மகிழ்ச்­சி­ய­டை­வீர்­கள்

பரி­கா­ரம் : உங்­க­ளுக்கு முரு­கப்­பெரு­ மாளின் அரு­ளைப் பெற கந்த சஷ்டி கவ­சத்தை அனு­தி­னம் படித்து வரு­வது அனைத்­து­வி­தத்­தி­லும் உங்­கள் வாழ்­வில் மேன்­மை­ய­டைய உத­வும்.

ரிஷபம்

உற­வி­னர்­க­ளை­விட நண்­பர்­க­ளி­டமே அதிக அள­வில் பற்­றும் பாச­மும் கொண்ட ரிசப ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் நீங்­கள் கண்­ட­கச் சனி­யின் பிடி­யி­லும் அது­மட்­டு­மல்­லா­மல் குரு­வும் பஞ்­சம ஸ்தான­மான ஐந்­தாம் இடத்­தி­லும் இருந்து கொண்டு வந்­தார்­கள். அவர்­க­ளில் சனி டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து தங்­கள் ராசிக்கு அஷ்­டம ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் அஷ்­டம சனி­யின் பிடி­யில் மாட்­டிக் கொண்­டோமே என அச்­சம் கொள்ள வேண்­டாம். உதா­ர­ண­மாக பத்­தாம் வகுப்பு மற்­றும் பன்­னி­ரெண்­டாம் வகுப்பு படிக்­கும் மாணவ மாண­வர்­கள் அந்த படிப்பு படிக்­கும் போது கஷ்­ட­மா­கத்­தான் இருக்­கும் பின்பு அத­னால் வரும் வெகு­ம­தி­யான அதிக மதிப்­பெண் மதிக்­கத்­தக்­க­தல்­லவா? அது போலத்­தான் இக்­கா­லக் கட்­டத்­தில் கஷ்­டங்­கள் இருந்­தா­லும் தம் கட­மையை உணர்ந்து நாம் செயல் பட்­டால் இறு­தி­யில் மகிழ்ச்­சியே என்­ப­து­தான் இந்த அஷ்­ட­மத்­தில் சனி வரு­வது மேலும் வருட பிற்­ப­கு­தி­யில் குரு ஆறாம் இடத்­திற்­கும் வரு­வ­தால் அவர் மறை­வது ரிசப ராசிக்கு நன்­மையே தவிர தீமை இல்லை என­லாம்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உத்­யோ­கம் சம்­பந்­த­மாக இட­மாற்­றம் ஏற்­ப­டும். இத­னால் குடும்­பத்தை விட்டு பிரிந்து வேறு ஊரு­க­ளில் பணி­பு­ரிய நேர­லாம். இருப்­பி­னும் எதிர்ப்­பார்த்த பதவி உயர்வு கிடைக்­கும். உயர அதி­கா­ரி­க­ளின் ஒத்­து­ழைப்­பைப் பெறு­வீர்­கள். சக பணி­யா­ளர்­கள் ஒத்­து­ழைப்­பார்­கள். மார்­கெட்­டிங் பிரி­வி­னர்­க­ளுக்கு சற்று அலைச்­சல்­கள் கூடும் என்­றா­லும் ஆர்­டர்­கள் குவி­யும்.

வியா­பா­ரி­க­ளுக்கு : பொரு­ளா­தார நிலை­யில் திருப்­தி­க­ர­மான முன்­னேற்­றம் காணப்­ப­டும். வர­வேண்­டிய பாக்­கித்­தொ­கை­கள் வசூ­லா­கி­வி­டும். சக வியா­பா­ரி­ க­ளுக்­கி­டையே கடு­மை­யான போட்­டி­கள் இருக்­கக் கூடு­மா­யி­னும் உங்­கள் சமயோசி ­த­மா­யன நட­வ­டிக்­கை­யா­ல் நஷ்­டத்­திற்கு இடம் தரா­மல் இலா­ப­க­ர­மாக நடத்­திச் செல­வீர்­கள். கூட்­டா­ ளி­கள் யாரும் இருப்­பின் அவர்­க­ளு­டன் வம்பு, வழக்­கு­கள் நேரா­மல் அனு­ச­ரித்­துச் செல்ல முய­லு­வீர்­கள். கொடுக்­கல், வாங்­கல் பிரச்­சி­னை­கள் எது­வும் இருக்­காது.

பெண்­க­ளுக்கு : குடும்ப நிர்­வா­க த்­தைத் திறம்­பட நடத்தி நற்­பெ­யர் பெறு­வீர்­கள். கண­வ­ரின் அன்­பைப் பரி­பூ­ர­ண­மா­கப் பெற்று மன­ம­கிழ்வு கொள்­வீர்­கள். குழந்­தை­க­ளின் நல­னில் அக்­கறை காட்டி அவர்­க­ளின் மகிழ்ச்­சி­யில் பங்கு கொள்­வீர்­கள் உடல் நலத்­தில் மட்­டும் அவ்­வப்­போது சற்றே அக்­கறை காட்டி வரு­வது அவ­சி­யம். தாம­த­மாகி வந்த திரு­மண முயற்சி சில­ருக்கு இப்­போது கை கூடி வர வாய்ப்­புண்டு. நீண்ட கால­மாக வேலைத் தேடி வந்­த­வர்­க­ளில் சில­ருக்கு இப்­போது நல்ல வேலை கிடைக்­கப் பெற்று நிம்­மதி அடை­வீர்­கள். கடன்­கள் யாவும் தீர்ந்து கைவ­சம் உள்ள தொகை­யில் சிலர் வாக­னங்­களை வாங்­கக் கூடிய வாய்ப்­பைப் பெறு­வீர்­கள். பணி­க­ளின் கார­ண­மாக சிலர் வெளி­யூர்­க­ளுக்கோ, வெளி­நா­டு­க­ளுக்கோ சென்று வர­வாய்ப்­புண்டு. இது­வரை பிள்­ளைப் பேறு வாய்க்­கா­மல் மருத்­து­வ­ம­னைக்கு சென்று வந்­த­வர்­க­ளுக்கு சிகிட்சை பலன் பெற்று அறி­வு­ட­னும் அழ­கு­ட­னும் ஆரோக்­கி­ய­முள்ள குழந்தை தங்­கள் மடி­யில் தவ­ழும் அருள் உங்­க­ளுக்கு உண்டு.

கலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்­பு­கள் உங்­க­ளைத் தேடி­வ­ரக் கூடிய வாய்ப்­புண்டு. சக கலை­ஞர்­க­ளின் ஒத்­து­ழைப்­பைப் பெறு­வ­தில் நீங்­கள் அதிக கவ­னம் செலுத்­து­வது, உங்­கள் வாய்ப்­பு­கள் பறி­போ­கா­மல் இருக்­கப் பெரி­தும் உத­வும். கிடைக்­கும் வாய்ப்­பு­க­ளில் உங்­கள் திறமை முழு­மை­யாக வெளிப்­பட்டு ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளைப் பெறு­வீர்­கள். வெளி­யூர்­க­ளுக்­குச் செல்­லும் நேரங்­க­ளில் உடல் நலம் குன்ற வாய்ப்­புண்டு என்­ப­தால் எச்­ச­ரிக்கை தேவை.

பரி­கா­ரம் : பெண்­கள் வெள்­ளிக் கிழமை விர­தம் மேற்­கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்லி வழி­ப­டு­வது மிக­வும் நல்­லது. வயது முதிர்ந்­த­வ­ருக்­குச் இயன்ற உத­விச் செய்­யுங்­கள்.

மிதுனம்

புது­மையை அதி­கம் நேசித்­தா­லும் பழ­மையை விட்­டுக்­கொ­டுக்­கா­த­வர் நீங்­கள். மொத்­தத்­தில் முன்­னோர்­க­ளின் சொல்­லிற்கு மதிப்பு கொடுக்­கும் மிதுன ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு உப ஜெய ஸ்தானத்­தில் நின்­றி­ருந்த சனி தற்­போது ஏழாம் இட­மான தனுசு ராசிக்கு டிசம்பர் மாத இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு கண­வன் மனை­வி­யி­டையே வாக்­கு­வா­தத்தை தவிர்த்­துக் கொள்­வது நல்­லது. சற்று சிர­மம் இருப்­பது உண்­மையே என்­றா­லும் உங்­க­ளுக்கு சுகஸ்­தா­னத்­தில் ஸ்தானத்­தில் குரு­வும் இருந்து கொண்டு வரு­வ­தால் தங்­க­ளுக்கு குரு அரு­ளின் உத­வி­யால் நன்­மை­களை எதிர்­பார்க்­க­லாம். வரு­டப் பிற்­ப­கு­தி­யில் குரு பெயர்ச்­சி­யா­வ­தால் தாங்­கள் கூடு­தல் தொழில், உத்­யோ­கம், குடும்­பம், பொரு­ளா­தா­ரம் போன்­ற­வற்­றில் கூடு­தல் கவ­னம் தேவை. உடல் நலத்­தி­லும் முன்­னெச்­ச­ ரிக்­கை­யு­டன் இருந்து வந்­தால் துன்­பங்­களை தவிர்க்­க­லாம். மாண­வர்­க­ளுக்கு ஞாபக மறதி உண்­டா­கும். அர­சி­யல் மற்­றும் பொது நல சமூக ஆர்­வ­லர்­கள் தங்­கள் உடன் இருப்­ப­வர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நல்­லது.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : அலு­வ­லக சம்­பந்­த­மாக வெளி­யூர் பிர­யா­ணங்­கள் செல்ல வாய்ப்­புண்டு என்­ப­தால் தாங்­கள் தங்­கள் அலு­வ­லக கோப்­பு­களை பத்­தி­ர­மாக கண்­கா­ணிப்­பது மிக அவ­சி­யம். கார­ணம் வருட முற்­ப­கு­தி­யில் முக்­கி­யப் பொருட்­கள் தொலைந்து போவ­தற்கு வாய்ப்பு இருப்­ப­தால் தங்­க­ளின் அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளின் மீது அதா­வது செல்­போன், ஸ்பெக்ஸ் போன்ற பொருட்­க­ளின் மீது கூடு­தல் கவ­னம் வைப்­பது நல்­லது. மற்­ற­வ­ரின் வேலை­க­ளை­யும் தங்­க­ளி­டமே குவி­கின்­ற­னவே என்று அலுத்­துக் கொள்­வீர்­கள்.

வியா­பா­ரி­க­ளுக்கு : இந்த ஆண்டு தங்­கள் வியா­பா­ரம் நொடிந்து விடுமோ என்ற பயம் ஏற்­பட்­டி­ருந்­தால் அதற்கு இடம் இல்லை என்றே சொல்ல வேண்­டும். கார­ணம் தங்­கள் ராசி­யின் தொழில் ஸ்தானா­தி­ப­தி­யான குரு பக­வான் இந்த ஆண்டு முழு­வ­தும் பக்க பல­மாக இருப்­ப­தால் வியா­பா­ரத்­தில் எந்த தொய்­வும் ஏற்­ப­டா­மல் மாறாக லாபமே கிடைக்­கும். ஆத­லால், தங்­க­ளுக்கு வியா­பா­ரத்தை பற்றி அச்­சம் கொள்­ளா­மல் வியா­பா­ ரத்தை எப்­படி எல்­லாம் விரி­வு­ப­டுத்­த­லாம் என்ற அள­விற்கு பல கிளை­கள் துவங்­க­வும் இந்த ஆண்டு தங்­க­ளுக்கு உள்­ளது என­லாம்.

பெண்­க­ளுக்கு : பெண்­கள் ஆடம்­ப­ரச் செல­வு­களை மட்­டும் கட்­டு­ப­டுத்­திக் கொண்­டால் பொரு­ளா­தா­ரச் சிக்­கல்­க ளை தவிர்த்து விட­லாம் என்­னும் அள­விற்கு சர­ள­மான பணப்புழக்­கம் இருந்து வரும். புதி­தாக துவங்­கும் முயற்­சி­க­ளில் அப­ரி­மி­த­மான வெற்­றி­யைப் பெற்று மகி­ழச் செய்­வார். எதை­யும் திட்­ட­மிட்­டுச் செய்­வ­தில் பெரும் சமர்த்­த­ராக விளங்கி அதன் மூலம் உங்­கள் முயற்­சி­க­ளில் பெரும் வெற்­றிப் பெற்று மகிழ்­வீர்­கள். குடும்­பத்­து­டன் சில பய­ணங்­களை மேற்­கொண்டு மகிழ்ச்சியடை­யும் வாய்ப்­பு­க­ளும் அமை­யக் கூடும். எதை­யும் திட்ட மிட்­டுச் செய்­வ­தில் பெரும் சமர்த்­த­ராக விளங்கி அதன் மூலம் உங்­கள் முயற்­சி­க­ளில் பெரும் வெற்­றிப் பெற்று மகிழ்­வீர்­கள்.

கலை­ஞர்­க­ளுக்கு : தாங்­கள் நினைத்­த­தற்கு மாறாக பெரிய பாத்­தி­ரங்­கள் கிடைத்து அதிக தொகை பெறு­வீர்­கள். மேலும், சின்­னத் திரை­யில் ஜொலிப்­ப­வர்­க­ளுக்­கும் கூட பெரிய தொடர் நாட­கங்­க­ளி­லும் முக்­கிய கதா பாத்­தி­ரங்­கள் கிடைக்க வாய்ப்­புண்டு என்­ப­தால் இந்த ஆண்டு தங்­கள் தேவை­கள் பூர்த்தி அடை­யும் வரு­ட­மாக அமை­யும் என்­ப­தில் ஐய­மில்லை என்றே சொல்­ல­லாம்.

பரி­கா­ரம் : சனிக்­கி­ழமை தோறும் விர­தம் மேற்­கொண்டு பெரு­மாளை தரி­சித்து வரு­வ­து­டன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லி வழி­ப­டு­வது மிக­வும் நல்­லது. ஊன முற்­றோ­ருக்கு தங்­க­ளால் இயன்ற உத­வி­களை செய்து வாருங்­கள்.

கடகம்

மற்­ற­வ­ரி­டம் இனி­மை­யா­க­வும் நாக­ரி­க­மா­க­வும் பேசு­ப­வர் என்­ப­தால் உங்­க­ளி­டம் மனம் விட்டு பேசக் கூடிய நலம் விரும்­பி­கள் உங்­க­ளைச் சுற்றி நிறை­யவே இருக்­கும் கடகராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு ஐந்­தாம் இட­மான புத்திர ஸ்தானத்­தில் இது­வரை இருந்து வந்த சனி தற்­போது உப ஜெய ஸ்தான­மான ஆறாம் இட­மான தனுசு ராசிக்கு ஆண்டின் இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு தாங்­கள் தொட்ட காரி­யங்­கள் எல்­லாம் ஜெய­மா­கும். இது நாள் வரை இழுத்­துக் கொண்­டி­ருந்த வழக்­கு­கள் அனைத்­தும் தங்­கள் பக்­கம் வெற்­றி­யைக் கொடுக்­கும். குரு­வும் சுகஸ்­தா­னத்­தில் வருட பிற்­ப­கு­தி­யில் செல்­வ­தால் புது சொகுசு வாக­னம் வாங்­கு­வீர்­கள். புதிய வீடு வாங்­க­வும் இக்­கா­லக் கட்­டத்­தில் வழி­யுண்டு என­லாம். ரியல் எஸ்­டேட் தொழில் புரி­ப­வர்­க­ளுக்­கும், வாங்கி விற்­கும் இடைத்­த­ர­கர்­க­ளுக்­கும், இன்­சூ­ரன்ஸ் மற்­றும் ஏஜெண்ட் துறை­யில் உள்­ள­வர்­க­ளுக்­கும் இவ்­வாண்டு பிற்­ப­கு­தி ­யில் நல்­ல­தொரு பெரும் தொகை­யான கமி­ஷன் கிடைத்து மகிழ்ச்­சி­ய­டை­வீர்­கள்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உங்­கள் உயர் அதி­கா­ரி­க­ளின் பேரன்­பை­யும் மதிப்­பை­யும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்­ற­வற்­றைப் பெற்று மகிழ்­வீர்­கள். சக பணி­யா­ளர்­க­ளின் ஒத்­து­ழைப்­பைக் கண்டு பூரிப்­ப­டை­வீர்­கள். அதே­போல் நீங்­க­ளும் சம­யங்­க­ளில் அவர்­க­ளுக்கு உத­வு­வது அவ­சி­யம் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நீங்­கள் ஏற்­க­னவே நீண்ட கால­மாக கேட்டு வந்த கடன் உத­வி­கள் இப்­போது கிடைத்து உங்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தும்.

வியா­பா­ரி­க­ளுக்கு : வியா­பா­ரி­கள் தாங்­கள் தொடர்ந்து நஷ்­டத்­தைச் சந்­திந்­துத் துய­ரில் ஆழ்ந்­தி­ருந்த நீங்­கள் இப்­போது இழந்த தொகை எல்­லாம் திரும்­பப் பெற்று மகிழ்­வீர்­கள். போட்­டி­யா­ளர்­க ­ளின் முயற்­சி­கள் உங்­கள் வியா­பா­ரத்தை பாதித்து விடுமோ என்ற அச்­சம் தேவை இல்லை. உங்­க­ளுக்கு புதிய புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வ­தன் மூலம் வியா­பா­ரத்­தில் பெரும் லாபத்தை அடைந்து மகிழ்­வீர்­கள். மேலும், புதிய கிளை­களை திறந்து தொடர்ந்து முத­லி­டத்­தில் இருப்­பீர்­கள்.

பெண்­க­ளுக்கு : திரு­ம­ண­மாகி நீண்ட காலம் மகப்­பே­றின்றி கவ­லைப்­பட்டு வந்த தம்­ப­தி­ய­ருக்கு இந்த ஆண்டு கருத்­த­ரிக்க அதிக வாய்ப்­புண்டு. இக்­கா­லக் கட்­டத்­தில் நல்ல மருத்­து­வ­ரி­டம் சிகிட்சை மேற்­கொள்­ள­லாம். நிச்­ச­யம் பல­னுண்டு. குடும்ப நிர்­வா­கத்தை பொறுத்­த­வரை உங்­கள் சிறப்­பான நட­வ­டிக்­கை­கள் நற்­பெ­ய­ரைப் பெற்­றுத் தரும். உற­வி­னர்­க­ளின் போக்கு உற்­சா­க­மாக இராது. மாறாக, ஒரு­வரை ஒரு­வர் நன்கு புரிந்து கொண்டு இரு­வ­ரும் இணைந்தே வீட்­டின் முக்­கிய விச­யங்­க­ளைப் பற்றி முடி­வெ­டுப்­பர். அவர்­களை அன்­பை­யும் கண்­டிப்­பை­யும் சரி­ச­ம­மாக கொடுத்து நல்ல அறி­வு­ரைத் தரு­வ­தால் அவர்­கள் நல்­வ­ழி­யில் செல்­வர். திரு­ம­ண­மா­கா­மல் நீண்ட காலம் வரண் தேடி தவித்து வந்த இளம்­பெண்­க­ளுக்கு சற்று கூடு­தல் முயற்சி எடுத்­தால் நிச்­ச­யம் மண­மேடை ஏறும் வாய்ப்­புண்டு.

கலை­ஞர்­க­ளுக்கு : ஒப்­பந்­தம் செய்த படங்­கள் வரி­சை­யாக ஒன்­றன்­பின் ஒன்­றாக தொடர்ந்து முடித்து விடு­வீர்­கள். மேலும், வழக்­க­மாக உள்ள தொடர்­பு­கள் தொடர்ந்து வரும் என்­ப­தி­லும் சந்­தே­க­மில்லை. பிற கலை­ஞர்­கள் உங்­கள் வாய்ப்­பு­க­ளைத் தட்­டிப் பறிக்க முயற்சி செய்­தா­லும் தங்­கள் கடு­மை­யான உழைப்­பால் இறு­தி­யில் நீங்­களே வெற்றி பெறு­வீர்­கள்.

பரி­கா­ரம் : வெள்­ளிக்­கி­ழமை துர்க்கை அம்­ம­னுக்கு விர­தம் மேற்­கொண்டு ராகு கால நேரத்­தில் துர்கா அஷ்­ட­கம் படித்து எலு­மிச்­சம் பழத்­தில் விளக்­கேற்றி வரு­வது தங்­கள் வாழ்­வின் உயர் நிலைக்கு வர வழி­வ­குக்­கும்.

சிம்மம்

அஞ்­சாத நெஞ்­ச­மும் கம்­பீ­ரத் தோற்­ற­மும் அதே வேளை­யில் தர்ம சிந்­த­னை­யும் அமை­யப் பெற்­ற­வர்­கள் நீங்­கள். எந்த பிரச்­சி­னை­யும் துணிச்­ச­லு­டன் எதிர்­கொண்டு சளைக்­கா­மல் போராடி வெற்­றி­யைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு நான்­காம் ஸ்தானத்­தில் இது­வரை இருந்து வந்த சனி தற்­போது ஐந்­தாம் இட­மான பூர்­வ­புண்ய ஸ்தானத்­திற்கு ஆண்டின் இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு எந்த ஒரு காரி­ய­மும் முடி­வெ­டுக்­கும் முன் பல­முறை நன்கு சிந்­தித்து முடி­வெ­டுப்­பது நல்­லது. பிள்­ளை­க­ளால் வருத்­தம் ஏற்­பட வாய்ப்­புண்டு என்­ப­தால் அவர்­க­ளி­டம் தங்­கள் எதிர்­பார்ப்­பினை குறைத்து கொள்­வது மிக­வும் நன்­மை­யைத் தரும். மேலும், மற்­ற­வ­ரின் ஆலோ­ச­னை­யின் படி நடக்­கா­மல் நமக்கு எது நல்­லது என்று சரி­பார்த்து செய்­வது நல்­லது. இருப்­பி­னும் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக இருக்­கும் குரு­வால் தங்­கள் பத­வி­களை தக்க வைத்­துக் கொள்ள இய­லும். வருட இறு­தி­யில் விர­யங்­கள் ஏற்­ப­டு­மா­த­லால் சுப செல­வினை மேற்­கொள்­வது நல்­லது. ஜென்­மத்­தில் ராகு தொடர்ந்து சஞ்­ச­ரித்­துக் கொண்­டிப்­ப­தால் உடல் நலத்­தில் அடிக்­கடி நீரி­ழிவு மற்­றும் கை, கால் மூட்­டு­க­ளில் ஏதே­னும் பிரச்­சினை உள்­ளதா என அதிக கவ­னம் கொள்­வது தங்­கள் சிறப்­பான ஆரோக்­கி­யத்­திற்கு வழி­வ­குக்­கும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : சக அலு­வ­லர்­க­ளின் ஒத்­து­ழைப்பு மன­நி­றை­வைத் தரும் வகை­யில் இருந்து வரும். நீங்­கள் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கும் பதவி உயர்வு உங்­க­ளுக்கு கிடைக்க இன்­னும் சிறிது காலம் பொறுத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும். அலைச்­சல் கார­ண­மாக உடல் நலத்­தில் அவ்­வப்­போது ஏற்­ப­டக்­கூ­டிய சிறு குறை­பா­டு­களை அவ்­வப்­போது மருத்­துவ உதவி பெறுங்­கள்.

வியா­பா­ரி­க­ளுக்கு : வியா­பா­ரி­கள் புதிய முத­லீ­டு­க­ளைச் செய்­யும் போது அவ­ச­ரம் இல்­லா­மல், கூட்­டா­ளி­களை அல்­லது குடும்­பத்­தா­ரைக் கலந்­தா­லோ­சித்து செய்­வது நல்­லது. இந்த ஆண்டு தாங்­கள் எதிர்­பார்த்­த­தற்­கும் மேல் லாபத்தை ஈட்­டு­வீர்­கள். வாங்­கிய கடனை அடைக்­க­வும் வழி­பி­றக்­கும்.

பெண்­க­ளுக்கு : அக்­கம் பக்­கத்­தி­ன­ரி­டம் அனு­ச­ர­னை­யாய் நடந்து கொள்­வ­தன் மூலம் அனை­வ­ரி­ட­மும் நற்­பெ­யர் பெறு­வீர்­கள். குடும்­பப் பொறுப்­பு­க­ளில் அதிக அக்­கறை காட்டி, குடும்­பத்­தி­னர் அனை­வ­ரின் பாராட்­டு­க­ளை­யும் குறை­வின்றி பெற்று மகிழ்­வீர்­கள். குடும்­பத்­தி ற்­குத் தேவை­யான நவநாக­ரி­கப் பொருட்­களை வாங்கி குவிப்­பீர்­கள். புதிய ஆடை ஆப­ர­ணங்­களை வாங்கி அணிந்து மகி­ழும் வாய்ப்­பும் சில­ருக்கு அமை­யும், குல தெய்வ வழி­பாட்­டில் மிகுந்த விருப்­பம் கொண்டு ஆல­யப் பய­ணங்­களை மேற்­கொண்­டுச் சென்று வரு­வீர்­கள். பள்ளி மற்­றும் கல்­லூரி செல்­லும் மாண­வி­க­ளுக்கு உங்­கள் வகுப்­ப­றை­க­ளில் உங்­கள் கவ­னம் முழு­வ­தை­யும் பாடங்­க­ளில் செலுத்த முற்­ப­டுங்­கள். சில­ருக்கு போட்­டி­க­ளில் கலந்து கொண்டு பாராட்­டு­க­ளும், பரி­சு­க­ளும் பெறக்­கூ­டிய வாய்ப்­பும் உண்டு.

கலை­ஞர்­க­ளுக்கு : தங்­கள் படக்­காட்­சிக்­காக வெளி­யூர்­க­ளுக்­குச் சென்று இரவு நேரங்­க­ளில் தங்­கும் இடங்­க­ளில் மிக­வும் கவ­ன­மாக நடந்து கொள்­வது அவ­சி­யம். இல்­லா­விட்­டால், உங்­கள் நற்­பெ­ய­ருக்­கும் களங்­கத்தை உண்­டாக்­கி­வி­டும். எதிர்­பா­லி­ன­ரி­டத்­தில் நெருக்­கம் வேண்­டாம். சின்­னத்­தி­ரை­யில் நடித்து வரு­ப­வர்­க­ளுக்கு பெரிய வாய்ப்­பு­க­ளும் வந்து சேரும்.

பரி­கா­ரம் : குறிப்­பாக ஞாயிறு தோறும் சூரிய உத­யத்­தின் போது காயத்ரி மந்­தி­ரத்தை 108 முறை உச்­ச­ரித்து வர­வேண்­டும். அல்­லது கூட்­டுத் தொகை 9 வரும்­படி அதா­வது 9,18,27 என்ற எண்­ணி க்­கையின்­படி சொல்­வது தங்­கள் வாழ்வு வளம் பெற உத­வும்.

கன்னி

மற்றவர்களின் மனம் கோணாமல் நடந்து, சூழ்நிலையை அனுசரித்து, சொந்­த­மாக தொழில் செய்தோ வியா­பா­ரம் செய்தோ வச­தி­யாக வாழத் தெரிந்த கன்னி ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது­ப­லன்­கள் :இது­வரை உங்­கள் ராசிக்கு ஜென்­மத்­தில் குரு­ப­க­வான் சஞ்­ச­ரித்து வரு­வ­தால் மிக்­சி­யில் அகப்­பட்ட பழத்­தைப் போல் கடு­மை­யான துன்­பங்­க­ளைத் தந்­தி­ருப்­பார். மனம் கண்­டதை நினைத்து குழம்பி போயி­ருக்­கும். எதி­லும் மனம் ஒன்றி செயல்­ப­டா­மல் இருந்த நீங்­கள் சனி உங்­கள் ராசிக்கு 4–ம் இடம் செல்லும் வரை, ஆண்டின் இறுதி வரை தாங்­கள் பொறு­மை­யு­டன் இருந்­தாலே போதும். சொத்து இருந்­தும் அதனை அனு­ப­விக்க முடி­ய­வில்­லையே என்ற கவலை தீரும் கால­மாக இவ்­வாண்டு தங்­க­ளுக்கு இருக்­கும். ராகு கேது நிலை­யும் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கத்­தான் இருக்­கின்­றது. எனவே, புதுத் தொழில் துவங்­கு­வ­தும் அதன் மூலம் தங்­க­ளுக்கு லாபம் இரட்­டிப்­பா­கும் நிலை­யும் உண்டு. மாண­வர்­கள் தாங்­கள் எதிர்­பார்த்­த­தற்­கும் மேல் நன்­ம­திப்­பெண்­கள் வாங்­கு­வர். இருப்­பி­னும் படிப்­ப­தில் அலட்­சி­யம் காட்­ட­மல் இருப்­பது நல்­லது.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : வேலைத் தேடி அலைந்து வந்­த­வர்­கள் இப்­போது திருப்­தி­க­ர­மான வேலை வாய்ப்பை பெற்று விட முடி­யும். உத்­யோ­கத்­தில் பெரும் பிரச்­சி­னை­கள் எது­வும் ஏற்­பட வாய்ப்­பில்லை என்­றா­லும் கடின உழைப்­புத் தேவைப்­டும். சக உத்­யோ­கஸ்­தர்­க­ளின் மனம் கோணா­மல் அர­வ­ணைத்­துச் செல்­வ­தன் மூலம் உயர் அதி­கா­ரி­க­ளின் கண்­ட­னங்­களை தவிர்த்து விட­லாம். அலு­வ­ல­கத்­தில் உங்­க­ளுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்­மை­கள் கிடைக்க வாய்ப்­பு­கள் பிர­கா­ச­மாக உள்­ளன. தேவை­யற்ற விச­யங்­க ­ளில் அனா­வ­சி­ய­மாக தலை­யி­டும் உங்­கள் போக்கை தவிர்ப்­பது அவ­சி­யம்.

வியா­பா­ரி­க­ளுக்கு : சிறிய சில்­லரை வியா­பா­ரி­க­ளுக்கு பெரு­ம­ள­வில் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வ­து­டன் அவர்­க­ளின் தேவை­க­ளைத் திருப்தி படுத்தி அதிக அளவு லாபம் அடை­வீர்­கள். பெரிய அள­வில் கடையை அலங்­க­ரித்து கிளை­கள் துவங்­க­வும் இந்த ஆண்டு தங்­க­ளுக்கு இடம் தரு­கி­றது பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள்.

பெண்­க­ளுக்கு : குடும்­பத் தலை­வி­கள் தங்­கள் குடும்­பத்தை பரா­ம­ரிப்­ப­தில் உங்­கள் நிர்­வா­கத்­தி­ற­மைப் பளிச்­சி­டும். உத்­யோ­கத்­திற்கு செல்­லும் பெண்­கள் அலு­வ­ல­கத்­தில் சக அதி­கா­ரி­க­ளி­ட­மும்த உயர் அதி­கா­ரி­க­ளி­ட­மும் நற்­பெ­யர் பெற்­றா­லும், போக்­கு­வ­ரத்­தின் போது ஏற்­ப­டும் சிக்­கல்­க­ளால் மனம் வாட நேரும். மற்­ற­படி குடும்­பத்­தி­லும் வெளி­வட்­டார பழக்­கங்­க­ளா­லும் உங்­கள் நிர்­வா­கத் திற­மை­க­ளா­லும் பல­ரும் கண்டு வியப்­பா கள். திரு­ம­ண­மான இளம் தம்­ப­தி­யி­னர் மழ­லைச் செல்­வத்தை பெற்று சந்­தோ­ஷ­ம­டை­வார்­கள். பெண்­கள் தங்­கள் மனதை கட்­டுக்­குள் வைத்­துக்­கொண்டு ஒரு­நி­லைப் படுத்­து­வது அவ­சி­யம். புதிய நபர்­களை நம்­பி­வி­டா­தீர்­கள். அது தங்­களை ஆபத்­தில் கொண்டு செல்­லும். பெற்­றோர்­கள் தங்­கள் கட­மை­யைச் செய்­வர். அது­வரை கட­மையை உணர்ந்து நடப்­பது நல்­லது. உங்­களுக்கு ஏற்ற மண­ம­கன் கிடைப்­பார்.

கலை­ஞர்­க­ளுக்கு : சக கலை­ஞர்­க­ளி­டம் பகைமை காட்­டா­மல் பரி­வு­டன் நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­க­ளுக்கு எதிர்ப்­பு­கள் குறைய வாய்ப்­புண்டு. ரசி­கர்­க­ளின் உற்­சாக மிகு­தி­யால் பெரி­தும் மன­ம­கிழ்ச்சி அடை­வ­து­டன் உங்­கள் பொரு­ளா­தார வச­தி­க­ளும் பெரு­கும். சில­ருக்கு புதிய பட்­டங்­கள் பாராட்­டு­கள் கிடைக்க வாய்ப்­புண்டு. வெளி­யூர் பய­ணங்­கள் அடிக்­கடி ஏற்­பட இட­முண்டு.

பரி­கா­ரம் : ஒரு முறை­யா­வது இந்த ஆண்டு உங்­கள் குல தெய்­வத்தை தரி­சித்து வரு­வ­தால் உங்­கள் குடும்­பத்­தில் தடைப்­பட்­டி­ருந்த காரி­யங்­கள் யாவும் நிச்­ச­யம் நடை­பெற வாய்ப்­புண்டு.

துலாம்

தாயா­னா­லும் சரி தந்­தை­யா­னா­லும் சரி அநீ­தி­யாக நடந்து கொண்­டால் நீதி­யின் முன் அனை­வ­ரும் சமமே என்ற எண்­ணம் கொண்ட அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது­ப­லன்­கள் : இது­வரை உங்­கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்­தில் சஞ்­ச­ரித்து கொண்­டி­ருந்த சனி பக­வான் ஆண்டின் இறு­தி­யில் தங்­கள் ராசிக்கு உப ஜெய ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் குடும்­பத்­தில் இருந்து வந்த மனக்­கு­ழப்­பங்­கள், பணப் பிரச்­சி­ னை­கள், வம்பு, வழக்கு போன்­ற­வை­கள் தீரும். குரு பக­வான் தங்­கள் ராசிக்கு இந்த ஆண்டு பிற்­ப­குதி வரை உங்­கள் ராசிக்கு விரை­ய ஸ்­தா­னத்­தில் இருப்­ப­தால் கவலை கொள்ள வேண்­டாம். கார­ணம் உங்­கள் ராசிக்கு குரு நல்­ல­தில்லை என்­ப­தால் அவர் மறை­வது நன்­மை­யைப் பெற்­றுத் தரும். ஆத­லால், சென்ற ஆண்டு ஓடி ஆடி கடு­மை­யாக முயன்­றும் பெற முடி­யாத வெற்­றியை இப்­போது எளி­தா­கப் பெற்று மகிழ்ச்­சி­யில் திளைப்­பீர்­கள். உங்­களை ஏள­ன­மாக ஏறிட்டு பார்த்து வந்­த­வர்­க­ளும் உதட்­டில் புன்­ன­கை­ யும் உள்­ளத்­தில் பகை­யும் கொண்டு பழகி வந்­த­வர்­க­ளும் உங்­க­ளுக்கு அமைய இருக்­கும் வெற்­றி­க­ளைக் கண்டு வியப்­ப­டை­வார்­கள். உங்­கள் கற்­ப­னை­யாற்­ற­லால் கை நிறைய காசு பணம் குவி­யும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : சக ஊழி­யர்­க­ளு­டன் கனி­வாக நடந்து கொள்­வ­தன் மூல­மா­கவே உங்­கள் பேரில் புகார்­கள் எழா­மல் காப்­பாற்­றிக் கொள்ள முடி­யும். நீங்­கள் எதிர்­பார்த்­தி­ருந்த இட­மாற்­றம் உங்­கள் விருப்­பத்­திற்­கெ­தி­ரான இட­மாக இருந்­தா­லும் பொறு­மை­யு­டன் ஏற்­றுக் கொள்­வது நல்­லது. படிப்­ப­டி­யாக மறு­ப­ரி­சீ­ல­னை­யின் பேரில் அடுத்து நீங்­கள் எதிர்­பார்த்த இட­மாற்­றம் கிடைக்­கக் கூடும். உயர் அதி­கா­ரி க­ளி­டம் அனு­ச­ர­னை­யாக நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­க­ளுக்கு பணிப்­பளு குறைய வாய்ப்­புண்டு.

வியா­பா­ரி­க­ளுக்கு : வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அன்­பாக நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­கள் வழக்­க­மான வியா­பா­ரத்­தில் குறைவு ஏதும் ஏற்­ப­டா­மல் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளா­காத வகை­யில் தர­மான பொருள்­க­ளையே கொள்­மு­தல் செய்து வந்து வழங்­கு­வ­தில் நீங்­கள் இப்­போது அதிக அக்­கறை எடுத்­துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கைக் கூட்ட புதுப்புது தொழில் நுட்­பங்­க ளை பின்­பற்றி வாடிக்­கை­யா­ளர்­களை கவ­ரும் வண்­ணம் செய்­தால் வியா­பா­ரம் அதி­க­ரிக்க இய­லும்.

பெண்­க­ளுக்கு : குடும்ப ஓற்­றுமை சீர் குலைக்க வந்த மூன்­றாம் நபர் இருந்த இடம் இல்­லா­மல் போவர். குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். அடிக்­கடி உடல் நிலை சரி­யில்­லாத கார­ணத்­தால் தங்­க­ளுக்கு மருத்­துவ செல­வு­கள் ஆகும். பொரு­ளா­தார தட்­டுப்­பாடு ஏற்­பட இடம் உண்டு என்­றா­லும் சமா­ளித்து விடு­வீர்­கள். சுப நிகழ்ச்சி போன்ற முக்­கி­ய­மான முடி­வு­களை எடுப்­பதை தள்ளி வையுங்­கள். திரு­ம­ண­மா­காத பெண்­க­ளுக்கு பெற்­றோர் வரன் பார்க்க ஆரம்­பிப்­பர். திரு­மண பேச்சு வார்த்­தையை துவங்­கு­வீர்­கள்..

கலை­ஞர்­க­ளுக்கு : இக்­கா­லக்­கட்­டத்தை சிர­மத்­து­டன் கடக்­க­வேண்­டி­யி­ருக்­கும். சக கலை­ஞர்­க­ளிட்ம் அன்­பாக நடந்து கொள்­வ­தன் மூலம் அவர்­க­ளும் உங்­க­ளுக்­காக சில வாய்ப்­புக்­களை விட்­டுக் கொடுத்து உத­வு­வார்­கள். பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­ப­டு­மா­யி­னும் பழைய பாக்­கி­கள் வசூ­லா­வ­தன் மூலம் எப்­ப­டி­யா­வது சமா­ளித்து விடு­வீர்­கள். வெளி­யூர் பய­ணங்­க­ளை­யும் முகம் சுளிக்­கா­மல் ஏற்­றுக் கொள்­வது அவ­சி­யம்.

பரி­கா­ரம் : அர­ச­ம­ரம், வேப்­ப­ம­ரம் உள்ள குளக்­கரை மேடை­க­ளில் உள்ள இரு நாகங்­கள் பிணைந்­துள்ள கற்­சி­லையை பூஜிப்­ப­தும் அதிக நன்­மை­க­ளைத் தரும்.

விருச்சிகம்

எதி­லும் எப்­போ­தும் முன்­ன­னி­யி­ லேயே இருக்க விரும்­பும் குணம் கொண்ட விருச்­சிக ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொது­ப­லன்­கள் : உங்­க­ளுக்கு ஏழரை சனி­யின் ஒரு பகு­தி­யான விரைய ஸ்தானத்­தில் இது­வரை சஞ்­ச­ரித்து வந்த சனி பக­வான் தற்­போது தங்­கள் ராசிக்கு ஆண்டின் பிற்­ப­கு­தி­யில் ஜென்­மத்­திற்கு வரு­வ­தால் தங்­க­ளுக்கு அலைச்­சல்­கள் கூடும். உடல் நிலை­யில் அதிக கவ­னம் எடுத்­துக் கொள்­வது மிக அவ­சி­யம். மேலும், குரு பக­வான் லாப ஸ்தானத்­தில் இவ்­வ­ருட பிற்­ப­கு­தி ­யில் வரப் போவ­தால் தங்­க­ளுக்கு வரும் ஆரோக்­கிய குறை­பா­டு­கள் யாவும் பெரிய அள­வில் இருக்­காது என­லாம். உண­வில் எச்­ச­ரிக்கை அவ­சி­யம். சனி பாதக நிலை­யில் இருப்­ப­தால், யாரோ செய்த தவ­றுக்கு நீங்­கள் பலி­கா­டா­கப் போகி­றீர்­கள் என்­ப­தால், யாராக இருந்­தா­லும் அதிக நெருக்­கம் கொள்ள வேண்­டாம். பணப்­பு­ழக்­கங்­க­ளி­லும் அதிக எச்­ச­ரிக்­கைத் தேவை. குரு பக­வான் வருட பிற்­ப­கு­தி­யில் லாப ஸ்தானத்­திற்கு மாறு­வ­தால் வியா­பா­ரம் பெரு­கும். கடன் பாக்கி தீரும். குடும்­பம் மற்­றும் உடல் நிலை­யி­லும் நல்ல முன்­னேற்­றம் உண்­டா­கும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : அலு­வ­லக வேலை நிமித்­த­மாக வெளி­யூர்­க­ளுக்­குச் செல்ல நேரும் போது அதன் மூல­மா­க­வும் உங்­க­ளுக்கு பெரு­ம­ள­வில் நன்­மை­கள் கிட்­டும். இது­வரை மறுத்து வந்த மேலி­டத்­தி­லி­ருந்து பதவி உயர்­வுக்­கான உத்­த­ரவு இப்­போது உங்­களை தேடி வரும். உய­ர­தி­கா­ரி­க­ளும் உங்­க­ளது பணி நேர்த்­தி­யைக் கண்டு வியந்து பாராட்­டு­வார்­கள். குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் தேவை­களை பூர்த்தி அவர்­கள் அனை­வ­ரை­யும் மகிழ்­விப்­பீர்­கள்.

வியா­பா­ரி­க­ளுக்கு : பல­ரும் பார்த்து வியப்­ப­டை­யும் அள­விற்கு நெளிவு சுழி­வு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்றை எல்­லாம் முறைப்­படி செயல்­ப­டுத்தி வியா­பா­ரத்­தில் பெரும் லாபத்தை அள்­ளிக் குவிப்­பீர்­கள், வியா­பார சங்­கங்­க­ளின் முக்­கிய பொறுப்­பா­ள­ராக தேர்­வுப் பெற்று மகிழ்ச்­சி­ய­டை­வீர்­கள். தர­மான பொருள்­களை தரு­வித்து விற்­பனை செய்­வ­தன் மூலம் புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வர்.

பெண்­க­ளுக்கு : குடும்­பத்­தில்: கண­வன், மனைவி க்கிடையே சிறு சிறு வாக்கு வாதங்­கள் ஆனா­லும், ஒரு­வர் மீது ஒரு­வர் கொண்ட அன்பு வில­காது திரு­மண உறவு நன்­றாக இருக்­கும். திரு­ம­ணம் தள்­ளிப் போய் வந்­த­வர்­க­ளுக்கு இப்­போது திரு­மண பாக்­கி­யம் கைகூ­டும். பிள்­ளை­க­ளின் எதிர்­கால வாழ்க்­கை­யைக் குறித்து கவ­லைப்­பட்ட உங்­க­ளுக்கு இந்த ஆண்டு நற்­செய்­தியை அவர்­கள் கொடுப்­பார்­கள். தங்­க­ளுக்கு அவர்­க­ளால் பெருமை ஏற்­ப­டும் வகை­யில் நடந்து கொள்­வ­தால் மட்­டற்ற மகிழ்ச்சி இருக்­கும். மாண­வர்­கள் கல்­வி­யில் முன் எப்­போ­தை­யும் விட அதிக அக்­கறை காட்டி வரு­வீர்­கள். சக மாண­வர்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் கிடைக்­கும் வகை­யில் இருக்­கும். தேர்­வு­க­ளில் அதிக மதிப்­பெண்­க­ளைப் பெற்று பெற்­றோர் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளின் பாராட்­டு­களை பெறு­வீர்­கள்.

கலை­ஞர்­க­ளுக்கு : பட வாய்ப்­பு­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் உல்­லாச பய­ண­மா­க­வும் குடும்­பத்­தி­ன­ரு­டன் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வர முயல்­வீர்­கள். உங்­க­ளில் சிலர் பிர­ப­ல­மான நிறு­வ­னங்­க­ளின் பரி­சு­க­ளை­யும் பாராட்­டு­க­ளை­யும் பெற்று மகிழ்­வீர்­கள். பொறா­மை­யால் சக கலை­ஞர்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­ப­டும். தடை­களை தகர்த்­தெ­றி­வீர்­கள்.

பரி­கா­ரம் : வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் குரு­ப­க­வானை வணங்கி வாருங்­கள் குல தெய்வ வழி­பாட்­டில் அக்­கறை செலுத்­துங்­கள். அனாதை இல்­லங்­கள் முதி­யோர் காப்­ப­கங்­க­ளுக்கு முடிந்த அள­விற்கு உத­வுங்­கள். முடிந்­தால் அனு­தி­ன­மும் சண்­முக கவ­சம் படித்து வரு­வ­தும் பல நன்­மை­க­ளைப் பெற உத­வும்.

தனுசு

எதி­லும் நேர்­மையை விரும்­பும் நீங்­கள் பெரும்­பா­லும் கறா­ரா­க­வும் கண்­டிப்­பா­க­வும் இருக்­கும் தனுசு ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொதுப்­ப­லன்­கள் : உங்­க­ளுக்கு ஏழரை சனி­யின் ஒரு பகு­தி­யான விரைய ஸ்தானத்­தில் இது­வரை சஞ்­ச­ரித்து வந்த சனி பக­வான் இந்த ஆண்டு இறு­தி­யி­லும் குரு வரு­ட­பிற்­ப­கு­திக்கு பின் யோக­கா­ரர்களாக ­ வரு­வ­தால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருட முற்­ப­கு­தியை விட பிற்­ப­குதி உங்­க­ளுக்­குச் சாத­க­மான பலன்­களை கொடுக்­கப் போகி­றது. ஆத­லால், வருட பிற்­ப­கு­தி­யில் சுப­கா­ரி­ய ங்­களை வைத்­துக் கொள்­வது நல்­லது. தடைப்­பட்ட சுப­ கா­ரி­யங்­கள் இனிதே நடக்­கும். ராகு கேது வின் உத­வி­யால் தங்­க­ளுக்கு வெற்றி மேல் வெற்றி உண்­டா­கும். ஆத­லால், இனி உங்­கள் உள்­ள­மும் உட­லும் புதுப் பொலி­வு­ட­னும் மிடுக்­கான தோற்­ற­மு­டன் உலா­வ­ரு­வீர்­கள். தொழில், உத்­யோ­கம், பொரு­ளா­தா­ரம் போன்­ற­வற்­றில் முன் தொய்வு நிலை இருந்­தா­லும் தங்­கள் ஜாத­கத்­தில் கிரக நிலை­கள் நன்கு அமைந்­தி­ருந்­தால் அவை ஒன்­றும் இல்­லா­மல் போய்­வி­டும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உங்­க­ளுக்கு பணிப்­பளு மிகு­தி­யாக காணப்­ப­டும். எனி­னும் மனம் கோணா­மல் செய்­வது அவ­சி­யம். இல்­லை­யெ­னில் சகப் பணி­யா­ளர்­கள் யாரோ செய்த தவறு உங்­களை பாதிக்­கக் கூடும். பதவி உயர்வு போன்ற நன்­மை­களை இப்­போது எதிர்­பார்ப்­ப­தி­கில்லை. உய­ர­தி­கா­ரி­களை அனு­ச­ரித்து அவர்­க­ளுக்கு பணிந்து நடந்து கொள்­வ­தன் மூலமே உங்­க­ளுக்கு நற்­பெ­யர்­கிட்­டும்.

வியா­பா­ரி­க­ளுக்கு : உங்­கள் வியா­பா­ரத்­தில் சற்று மந்­த­மான நிலை­யே­தென்­ப­டும் கூடு­மா­ன­வரை தர­மான பொருட்­க­ளையே வழங்கி வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­களை திருப்­பிப்­டுத்தி அவர்­களை தக்க வைத்­துக் கொள்­வ­து­தான் இப்­போ­தைக்கு உங்­கள் வியா­பா­ரத்­திற்கு நல்­லது. எனவே தேவைக்கு மேற்­பட்ட பொருள்­களை கொள்­மு­தல் செய்­யா­மல் இருப்­பது உங்­கள் பொரு­ளா­தார கட்­டுப்­பாட்டை குறைக்­கும்.

பெண்­க­ளுக்கு : திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்­சி­க­ளுக்கு வருட பிற்­ப­கு­தியை விட வருட முற்­ப­கு­தியே சிறந்­தது. ஆத­லால், வரன் பார்க்­கும் போது அதி­க­மான கோரிக்­கை­களை முன் வைக்­கா­மல் எது அவ­சி­யமோ அதனை மட்­டும் பார்த்து முடி­வெ­டுப்­பது நல்­லது. கடின முயற்சி எடுத்­தால் தாங்­கள் எண்­ணி­ய­வாறே மண­ம­கன் அமை­வார். உற­வி­னர்­கள் அக்­கம் பக்­கத்­தி­ன­ரி­டம் கூடு­மா­ன­வரை அதிக நெருக்­கம் கொள்­ளா­மல் அள­வாக பழகி வரு­வ­தன் மூலம் அவ­சி­யம் இல்­லாத விண் வம்பு வழக்­கு­களை தவிர்த்­து­வி­ட­லாம். குடும்ப ஒற்­று­மையை கட்டி காப்­ப­தில் நீங்­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யாய் இருந்து குழப்­பங்­களை தவிர்த்து பெரி­தும் பாடு­பட வேண்டி இருக்­கும். மாண­வர்­கள் எந்த ஒரு பிரச்­சினை இருந்­தா­லும் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­ப­து­டன் பள்­ளிப்­பா­டங்­க­ளில் மட்­டுமே முழு கவ­ன­மும் செலுத்தி வரு­வது அவ­சி­யம்.

கலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்பு­ கள் மிகக் குறை­வா­கவே அமை­யக்­கூ­டும். இருப்­பி­னும், பொரு­ளா­தார குறை­பாடு ஏற்­பட வாய்ப்­பில்­லா­மல் பழைய பட வாய்ப்­பு­க­ளி­லி­ருந்து வர வேண்­டிய பாக்­கித் தொகை­கள் இப்­போது வசூ­லாகி ஓர­ளவு நெருக்­க­டி­கள் குறை­யும். கிடைக்­கக்­கூ­டிய சில வாய்ப்­பு­க­ளி­லா­வது உங்­கள் திற­மை­களை வெளிக்­காட்­டத் தவ­றா­தீர்­கள்.

பரி­கா­ரம் : உங்­கள் ராசிக்கு ஜென்­மத்­தில் சனி சஞ்ச்­ரிப்­ப­தால் சனிக் கிழ­மை­க­ளில் ஆஞ்ச நேய­ருக்கு வடை மாலை சாத்தி வணங்­குங்­கள். பெற்­றோர் அல்­லது அவர்­க­ளுக்கு இணை­யான வயது முதிந்­தோர் யாரி­ட­மா­வது வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் ஆசி­பெ­றுங்­கள். உங்­கள் பிறந்த நாளில் ஆண்­டில் ஒரு முறை­யா­வது ஏழை­க­ளுக்கு அன்­ன­தா­னம் செய்­யுங்­கள்.

மகரம்

நீங்­கள் மற்­ற­வர்­களை தன்­வ­சப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் வல்­ல­வர்­க­ளாக இருப்­பீர்­கள். எத்­த­கைய இன்­னல்­கள் ஏற்­பட்­டா­லும் சிறி­தும் கலங்­கா­மல் அவற்றை எதிர்த்­துப் போராடி வெற்றி பெறும் மகர ராசி அன்­பர்­க­ளுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொதுப்­ப­லன்­கள் : இந்த புத்­தாண்­டில் உங்­கள் ராசிக்கு சனி விரைய ஸ்தானத்­திற்கு இந்த ஆண்­டின் இறு­தி­யில் வரு­வ­தால் விரை­யங்­கள் ஏற்­பட வாய்ப்பு இருந்­தா­லும் உங்­கள் ராசிக்­குப் பாக்­கிய ஸ்தானத்­தில் வருட பிற்­ப­குதி வரை குரு பக­வான் சஞ்­ச­ரித்து வரு­வ­தால் சுப விரை­யங்­க­ளாக மேற்­கொள்­வது சிறந்­த­தா­கும். குரு­வின் அரு­ளால் தங்­க­ளுக்கு ஏற்­ப­ட­வி­ருக்­கும் பிரச்­சி­னை­களை குரு அரு­ளால் வந்த இடம் காணா­மல் போய்­வி­டும். அஷ்­ட­மத்­தில் ராகு இருப்­ப­தால் வாக­னப் பய­ணத்­தின் போது மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது நல்­லது. பணம் ஆங்­காங்கே மாட்­டிக் கொள்­ளும் ஆத­லால், யாரை­யும் நம்பி கடன் கொடுப்­பது நல்­ல­தல்ல. பொரு­ளா­தா­ரத்தை பொறுத்­த­வ­ரை­யில் பணப்­பு­ழக்­கம் சீராக இருந்து வரும்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சற்று தாம­தித்த பின்­தான் சம்­பள உயர்­வும் பதவி உயர்­வும் கிடைக்­கும். இருப்­பி­னும், தாங்­கள் நினைத்­தற்கு மேலா­கவே சிறப்­பான நற்­ப­லன் உண்­டா­கும். வேலைப்­பளு அதி­க­ரித்­தா­லும் நண்­பர்­கள், அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வும் உற்­சா­க­மும் மகிழ்ச்­சி­யை­யும் கொடுக்­கும். மேல­அ­தி­கா­ரி­கள் தங்­க­ளி­டம் நெருக்­கம் கொள்­வர். தங்­கள் சொல்­படி அவர்­கள் செவி சாய்ப்­பர். உங்­கள் கவுர­வம் கூடும்.

வியா­பா­ரி­க­ளுக்கு : அதிக லாபத்தை எதிர்­பார்ப்­பதை விட இயல்பு லாபம் கிடைத்­தாலே போதும் எண்­ணம் கொள்ள வேண்­டும். நிச்­ச­யம் தங்­கள் உழைப்பு வீண் போகாது. கைவி­னைப் பொருட்­கள், டைல­ரிங் மற்­றும் மெஸ் வைத்து இருப்­ப­வர்­க­ளுக்­கும் அதிக லாபத்தை ஈட்­டு­வர். ஆடை போன்ற தொழி­லில் ஈடு­பட்­ட­வ­ருக்கு எதிர்­பார்த்த லாபம் கிடைக்­கும். மொத்­தத்­தில் வியா­பா­ரத்­தில் முன்­னேற்­றம் காண்­பீர்­கள்.

பெண்­க­ளுக்கு : வெகு­கா­ல­மாக வெளி­நாட்டு வேலைக்­காக காத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு தாங்­கள் விரும்­பி­ ய­வாறே வெளி­நாட்­டி­லி­ருந்து அழைப்பு வரும். மேலும், குடும்­பத்­து­டன் இடம் பெய­ர­வும் வாய்ப்­புண்டு. அயல்­நாட்­டில் வேலை செய்­யும் மண­ம­க­னும் வாய்க்க வாய்ப்பு அதி­கம் உள்­ளது. இருப்­பி­னும் திரு­ம­ணப் பொருத்­தம் பார்க்­கும் போது அனைத்­துப் பொருத்­தங்­க­ளில் குறிப்­பாக கட்­டப் பொருத்­தம் பார்த்து மண­மு­டிப்­பது நல்­லது. வய­தில் மூத்­த­வர்­கள் தங்­கள் உடல் நலத்­தில் கவ­னம் காட்­டுங்­கள். உட­லில் ஆங்­காங்கே எலும்பு இணை­யும் பகு­தி­யான கால் மூட்­டு­க­ளி­லும், கை மூட்­டு­க­ளி­லும், இடுப்பு இணை­யும் பகு­தி­யி­லும் எலும்பு சம்­பந்­தப்­பட்ட உபா­தை­கள் ஏற்­ப­டக் கூடும். வாக­னங்­க­ளில் செல்­லும்­போது அதிக கவ­னம் தேவை.

கலை­ஞர்­க­ளுக்கு : கலை­ஞர்­க­ளுக்கு தங்­கள் திற­மை­யால் புதிய ஒப்­பந்­தங்­கள் தேடி வரும்.. சம்­பள விச­யத்­தில் முன் கூட்­டியே கண்­டிப்­பு­டன் பேசி விடு­வது நல்­லது. படப்­பி­டிப்­பு­கள் கார­ண­மாக அலைச்­சல் அதி­க­ரிக்­கும். இருப்­பி­னும்,அர­சால் விரு­து­கள் கிடைக்­க­வும் வாய்ப்பு உண்டு. ரசி­கர்­கள் அதி­க­ரிப்­பர். எதிர்­பா­ரா­மல் உங்­களை மூத்­தக் கலை­ஞர்­கள் பாராட்­டு­வர்.

பரி­கா­ரம் : சனிஸ்­வர பக­வானை சனிக் கிழ­மை­க­ளில் வணங்­குங்­கள். தின­மும் வினா­ய­கர் அக­வல் படி­யுங்­கள். மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு உங்­க­ளால் இயன்ற உத­வி­களை செய்­யுங்­கள். சனி ஸ்துதி நீலாஞ்­சன சமா பாசம் ; ரவி­புத்­ரம் யமாக்ஞ்­ர­ஜம் சாய மார்த்­தாண்ட ; தம்­ந­மாமி சனைஸ்­வ­ரம்

கும்பம்

செய்­யும் தொழிலே தெய்­வம் என்று தங்­கள் பணிக்கு முத­லி­டம் கொடுப்­ப­வர். எவ்­வ­ளவு கீழே விழுந்­தா­லும் மீண்­டும் எழுந்து நிற்­கும் தன்­னம்­பிக்கை கொண்ட கும்ப ராசி அன்­பர்­க­ளுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொதுப்­ப­லன்­கள் : இந்த புத்­தாண்­டில் உங்­கள் ராசிக்கு குரு அஷ்­டம ஸ்தானத்­தி­லும் இந்த ஆண்­டின் இறு­தி­யில் சனி தனுசு ராசிக்கு சென்று உப ஜெய ஸ்தானத்­தி­லும் இருப்­ப­தால் பல தொல்­லை­கள் மனக்­கு­ழப்­பங்­க­ளுக்கு இடையே இருந்த நீங்­கள் தங்­கள் ராசிக்கு சனி நல்ல ஸ்தானத்­தில் டிசம்பர் முதல் வரு­வ­தால் தங்­க­ளுக்கு இருந்த இக்­கட்­டான சூழல் மாறி நீங்­கள் எண்­ணி­யக் காரி­யங்­கள் ஈடே­றப்போகி­றது. சனி­யின் உத­வி­யால் நீங்­கள் அனைத்­தை­யும் தங்­கள் பக்­கம் சாதகமாக்கி கொள்வீர்கள். உற­வி­னர்­க­ளின் உற்­சா­க­மான போக்கை கண்டு மனம் மகிழ்­வீர்­கள். பொரு­ளா­தார நிலை­யில் மிகப்­பெ­ரும் முன்­னேற்­றத்தை காண்­பீர்­கள். குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் அர­வ­னைப்பு நீங்­கள் மகிழ்ச்­சி­யில் திளைப்­பீர்­கள். சுப நிகழ்ச்சி நடை­பெ­ற­வும் இட­முண்டு. உடல் நிலை­யில் மட்­டும் தாங்­கள் அக்­கறை செலுத்­து­வது மிக நல்­லது. வயது மிக்­க­வர்­கள் அதிக அலைச்­சலை தவிர்த்து அத்­தி­யா­வ­சி­யத் தேவைக்­கும் மட்­டும் தாங்­கள் பய­ணங்­களை மேற்­கொள்­வது நல்­லது. இத­னால் தங்­க­ளுக்கு ஏற்­ப­டும் நோய்­க­ளி­லி­ருந்து காப்­பாற்­றிக் கொள்­ள­லாம்.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : நீங்­கள் நீண்ட கால­மாக எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருந்த பதவி உயர்வு இப்­போது கிடைக்­கப் பெற்று சந்­தோ­ஷ­ம­டை­வீர்­கள். சக பணி­யா­ளர்­கள் எல்­லோ­ருமே உங்­கள் பணித் திற­மையை பாராட்­டு­வ­தைக் கண்டு பூரிப்­ப­டை­வீர்­கள். உங்­கள் பணி­யி­டத்­தில் இன்­றி­ய­மை­யாத ஒரு நப­ராக நீங்­கள் இருப்­பீர்­கள். சில­ருக்கு எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த இட­மாற்­றம் இப்­போது கிடைத்து சந்­தோ­ஷத்­தில் திளைப்­பீர்­கள்.

வியா­பா­ரி­க­ளுக்கு : இக்­கால கட்­டத்­தில் வியா­பா­ரத்­தில் கொடி கட்டி பறப்­பீர்­கள். வர்த்­தக உல­கத்­தில் குறிப்­பி­டத்­தக்க பெரும்­புள்­ளி­யாக உயர்ந்து அனை­வ­ரை­யும் வியக்க வைப்­பீர்­கள். புதிய புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் உங்­களை தேடி வரு­வ­தன் மூலம் வியா­பா­ரம் பன்­ம­டங்­காக பெரு­கும். பொரு­ளா­தார முன்னே ற்றத்தை பெரு­ம­ள­வில் காண இருக்­கும் நீங்­கள் அசை­யாச் சொத்­துக்­களை வாங்­கிப் போட்டு ஆனந்த ப்படு­வீர்­கள். உங்­கள் பணி­யா­ளர்­க­ளுக்­கும் தேவை­யான சௌக­ரி­யங்­களை செய்து கொடுத்து அவர்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தின் மூலம் அவர்­கள் வியா­பா­ரத்­தில் கவ­ன­மும் அக்­க­றை­யும் செலுத்­தச் செய்­வீர்­கள்.

பெண்­க­ளுக்கு : திரு­ம­ணத்­தைப் தாங்­கள் முடி­வெ­டுக்­கா­மல் பெரி­ய­வர்­க­ளி­டம் விட்­டு­வி­டு­வது நல்­லது. புதிய நபர்­களை நம்பி ஏமா­றா­மல் இருப்­பது தங்­கள் எதிர்­கால வாழ்­விற்கு நன்­மை­யைத் தரும். உயர் நிலைப் பள்­ளிப் பயி­லும் மாண­வி­கள் நீங்­கள் எதிர்­பார்த்த துறை கிடைக்­கப் பெற கடந்த கால குறை­பா­டு­க­ளைப் போக்க இந்த ஆண்டு துவக்­கத்தி ­லேயே மதிப்­பெண் குறைந்த பாடங்­க­ளில் அதிக கவ­னம் செலுத்தி வந்­தால் நீங்­கள் எதிர்ப்­பார்த்த மதிப்­பெண்­கள் அதி­கம் பெற்று தாங்­கள் விரும்­பிய துறை­யி­லேயே பிரகா ­சிக்க இய­லும்.

கலை­ஞர்­க­ளுக்கு : பொரு­ளா­தார நிலை­யில் பெரும் முன்­னேற்­றத்தை அடைந்து பெரும் தொகை­களை அசையா சொத்­துக்­க­ளில் முத­லீடு செய்து மகிழ்­வீர்­கள். உங்­கள் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தக் கூடிய அள­வில் அமைந்த பாத்­தி­ரப் படைப்பு அமை­யும் வகை­யில் உங்­க­ளுக்கு புதிய ஊதிய வாய்ப்­பு­கள் தேடி வந்து உங்­கள் புகழை உயர்த்­தும்.

பரி­கா­ரம் : புதன் மற்­றும் சனி கிழமை தோறும் பெரு­மா­ளுக்கு துளசி மாலை அணி­வித்து ஸ்ரீநி­வாச காயத்ரி மந்­தி­ரத்தை ஒன்­பது முறை யோ அல்­லது கூட்­டுத் தொகை 9 வரும்­ப­டியோ அதா­வது 18, 27,81, 108 போன்ற எண்­ணிக்­கை­ய­ளவு உச்­ச­ரிப்­பது மிக­வும் நல்­லது. ஸ்ரீநி­வாச காயத்ரி மந்­தி­ரம் நிரஞ்­ச­னாய வித்­மஹே! நிரா­பா­சாய தீமஹி! தந்நோ ஸ்ரீநி­வா­சாஹ ப்ரசோ­த­யாத்!

மீனம்

உங்­க­ளுக்கு சிலர் தாமாக முன் வந்து உத­வு­வார்­கள் ஆயி­னும், நீங்­கள் திருப்பி அதற்கு ஈடான உத­வி­களை தக்க சம­யம் பார்த்து செய்து விடும் மீன ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.

பொதுப்­ப­லன்­கள் : சென்ற ஆண்டு முழு­வ­தும் உங்­கள் ராசிக்கு பாக்­கிய ஸ்தானத்­தில் சனி இருந்­தும் பெரிய அள­வில் முன்­னேற்­றம் இல்லை என்று வருத்­தப்­பட்­ட­ தெல்­லாம் ஆண்டின் இறுதியில் சனி தொழில் ஸ்தானத்­திற்­குச் செல்­வ­தால் தங்­க­ளுக்கு உங்­கள் குடும்ப வாழ்க்கை, தொழில், வியா­பா­ரம் போன்­ற­வற்­றில் நல்ல முன்­னேற்­றம் காண­லாம். மேலும், உங்­கள் ராசிக்கு சப்­தம ஸ்தானத்­தில் குரு பார்­வைப் பெற்­றி­ருப்­ப­தால் தங்­கள் தேகம் பொலி­வு­று­வ­து­டன் உங்­கள் முயற்சி வெற்­றி­ய­ளிக்­கும் என்­ப­தில் ஐயம் வேண்­டாம். எந்த ஒரு நல்ல காரி­யங்­கள் என்­றா­லும் வருட முற்­ப­கு­தி­யில் வைத்­துக் கொள்­வது நல்­லது. வருட பிற்­ப­கு­தி­யில் குரு தங்­கள் ராசிக்கு அஷ்­டம ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் தங்­கள் முயற்­சி­கள் பல­னின்றி போக வாய்ப்­புண்டு. ஆத­லாம், வருட முற்­ப­கு­தியை பயன் படுத்­திக் கொள்­வது சால சிறந்­தது.

உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உய­ர­தி­கா­ரி­க­ளின் எண்­ணங்­க­ளுக்கு ஈடு கொடுத்து உங்­கள் பணி­களை மிக ஒழுங்­கா­க­வும் சிறப்­பா­க­வும் குறை­யின்றி செய்து வந்­தால் உங்­கள் நற்­பெ­யரை காப்­பாற்­றிக் கொள்­வ­து­டன் அதுவே எதிர்­கா­லத்­தில் நீங்­கள் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் பதவி உயர்­வைப் பெற்று மகி­ழ­வும் அடிப்­ப­டை­யாக அமை­யும். வாக­னங்­க­ளில் பய­ணம் செய்­யும் போது சற்றே எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது நல்­லது.

வியா­பா­ரி­க­ளுக்கு : வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தொடர் ஆத­ர­வைப் பெற நீங்­கள் சற்றே கடி­ன­மாக முயற்சி செய்ய வேண்­டி­யி­ருக்­கும். போட்­டி­யா­ளர்­க­ளின் கை ஓங்கி விடாத அள­வுக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­கள். இல­வ­சங்­கள் போன்ற ஏதே­ னும் புதிய முயற்­சி­க­ளைச் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். பண நட­மாட்­டம் சற்றே கவலை தருமே என்­றா­லும் புதிய கடன்­க­ளைப் பெறா­மல் ஏற்­க­னவே உள்ள சேமிப்­பு­க­ளின் மூலம் சமா­ளித்­துக் கொள்­வீர்­கள். பணி­யா­ளர்­களை அர­வ­னைத்­துச் செல்­லுங்­கள்.

பெண்­க­ளுக்கு : குடும்ப நிர்­வா­கம் ஓர­ளவு சிர­மம் தரு­வ­தாக இருந்­தா­லும் குடும்­பத்­தி­லுள்ள மற்­ற­வர்­கள் உத­வு­தன் கார­ண­மாக உங்­கள் சிர­மங்­கள் ஓர­ளவு குறை­யும். பொரு­ளா­தார நிலை வர­வுக்கு செல­வுக்­கும் சரி­யா­யி­ருக்­கும என்­ப­தால் பெரி­தா­கக் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை. பிள்­ளை­க­ளின் உடல் நலத்­தில் சற்றே அக்­கறை செலுத்த நேரும். தம்­ப­தி­யி­டையே சிறு­சிறு மனத்­தாங்­கல்­கள் ஏற்­பட்டு நீங்­கும். பொரு­ளா­தார நிலை சற்றே ஏறக்­கு­றை­ய­தான் இருக்­கும் என்­ப­தால் நீங்­க­ளும் அதற்­கேற்ப சிக்­க­னத்தை கடை­பி­டிக்க வேண்­டி­யது இருக்­கும். குழந்­தை­க­ ளின் பரா­ம­ரிப்­பில் அதிக அக்­கறை காட்­டு­வீர்­கள். அவர்­க­ளின் அன்பை பூர­ண­மாக பெறு­வீர்­கள். பள்ளி செல்­லும் மற்­றும் கல்­லூ­ரிச் செல்­லும் மாண­வி­கள் படிப்­பைத் தவிர பிற துறை­க­ளி­லும் விளை­யாட்­டு ­க­ளி­லும் அதிக நேரத்­தைச் செல­வி­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டி­யது அவ­சி­யம்.

கலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்­பு­க­ளைப் பெறக் கடி­ன­மான முயற்­சி ­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் பெரிய நிறு­வ­னங்­கள் சிறிய நிறு­வ­னங்­கள் என்ற பாகு­பாடு பாரா­மல் கிடைக்­கும் வாய்ப்பு எது­வா­யி­னும் நழுவ விடா­மல் பிடித்­துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம். வெளி­யூர்ப் பய­ணங்­கள் அடிக்­கடி இருக்­கும் என்­றா­லும் மறுக்­கா­மல் ஏற்­றுக் கொண்டு வந்­தால் அதன் மூலம் மேலும் பல புதிய வாய்ப்­பு­கள் வந்து சேர இட­முண்டு.

பரி­கா­ரம் : தின­மும் குரு­வின் மந்­தி­ரத்தை படி­யுங்­கள். தட்­சி­ணா­மூர்த்­திக்கு மஞ்­சள் வஸ்­தி­ரம் அணி­வித்து வணங்­குங்­கள். ஏழை மாணவ மணி­க­ளின் கல்­விச் செல­வுக்கு இயன்ற உதவி செய்­யுங்­கள். மகான்­க­ளின் ஆசி­யைப் பெறு­வ­தும் நன்­மை­யைத் தரும்.