மேலக்குளத்தில் அஷ்டபுஜ வராஹி ஆலய கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 21:01


நெல்லை,


நெல்லை மாவட்டம் மேலக்குளத்தில் அஷ்டபுஜ வராஹி ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் மேலக்குளத்தில் புதியதாக கட்டபட்டுள்ள அஷ்டபுஜ வராஹி அம்மன், வரசித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்டபுஜ வராஹி அம்மன், வரசித்தி வினாயகர், காலபைரவர் உள்ளிட்ட விக்ரஹங்களுக்கு எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் அஷ்டபுஜ வராஹி அம்பாளுக்கு கலசாபிசேகம் நடைபெற்றது.


பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.