நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்தார்

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 21:00

நெல்லை,


நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்தார்.

நெல்லை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கல்வெட்டினை கட்சியின் மாவட்ட தலைவர்கள் திறந்து வைத்தனர்.


தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக கட்டிடங்களை திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்தார்.


அதன்படி நெல்லை உடையார்பட்டி வடக்கு பைபாஸ் சாலையில் புதிதாக நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகமாக 4 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்தார்.


 அதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய அலுவலகக் கட்டிட கல்வெட்டினை அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி தலைவர் ராஜா கண்ணன், நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் முன்னாள் மாவட்ட தலைவர் தயாசங்கர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அதேபோல புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலக கட்டிடத்தை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.