வூசு விளையாட்டில் வடசென்னை மாணவர் சாதனை

பதிவு செய்த நாள் : 18 நவம்பர் 2021 19:04

சென்னை

வூசு தமிழ்நாட்டில் பாப்புலராகி வரும் வீரவிளையாட்டுக்களில் ஒன்று. யோகா ஜிம்னாஸ்டிக், பிட்னஸ் போன்றவற்றின் கலவை தான் வூசு (Wushu - உஷு).

இதற்கான தேசிய விளையாட்டு போட்டி, கடந்த மாதம், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் நடந்தது. பல்வேறு மாநிலங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கேரளம்  முதலிடத்தை வென்றது. கர்நாடகா இரண்டாது இடத்தை பிடித்தது. மூன்றாவது இடத்தை தமிழகத்தை சேர்ந்த தருண்ராஜ் வென்றிருக்கிறார்.

வூசு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த  தருண் வடசென்னை ராயபுரத்தில் உள்ள கலைமகள்  வித்யாலயாவில் பிளஸ் 2 படிக்கிறார். உங்களது அடுத்த கட்ட நகர்வு என்ன என்று கேட்டபோது, அடுத்தது, பிளஸ்  தேர்வை சிறந்தமுறையில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

வூசு போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தை பிடிக்க வேண்டும். ஓலிம்பிக்கில் பங்கேற்று தங்கபதக்கம் வென்று  இந்தியாவுக்கு பெருமை தேடி தரவேண்டும். அதற்கு என்னை போன்ற வீரர்களுக்கு தமிழக அரசும் மத்திய அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.

மதுரையை பூர்வீகமாக கொண்டது தருணின் குடும்பம். ஆனால் தருண்ராஜ் பிறந்தது, தவழ்ந்தது, வளர்ந்தது சென்னையில் தான். இவரது தந்தை விசாகபதி, வூசு வீரர். குங்பூவிலும் சாதனை படைத்து வரும் சமூக ஆர்வலர். சென்னை மாவட்ட வூசு விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் தலைவர். சென்னையில் எங்கள் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். காவல்துறை தரப்பிலும் வூசு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

வூசு விளையாட்டு போட்டியில்,மாணவர்கள் விருப்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

அடுத்தடுத்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெல்லக்கூடிய வாய்ப்புகளும் வசதிகளையும் அரசு உருவாக்கித்தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.