வ.உ.சியின் 85வது நினைவு தினம் - ஒட்டப்பிடாரத்தில் வஉசி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

பதிவு செய்த நாள் : 18 நவம்பர் 2021 16:23

தூத்துக்குடி

இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நினைவு நாளை (18-11-2021) முன்னிட்டு, வஉசி பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், வ. உ. சிதம்பரனார் அவர்களது 150 வது பிறந்த நாள் / 85வது நினைவு தினத்தை ஒட்டி அவரது பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், இயல் இசை நாடக மன்றத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஆணையர் பிரகாஷ்  மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் திருநெல்வேலியில் உள்ள வஉசி மணிமண்டபத்திலும் அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.