‘டான்சிங் கில்லாடிஸ்' பிப்ரவரி 18 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2017 03:43

ரசிகர்களின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் “டான்ஸிங் கில்லாடிஸ்” எனும் புதுமையான டான்ஸ் ரியாலிட்டி ஷோ வரும் பிப்ரவரி 18 முதல் சனி தோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிற டான்ஸ் ஷோக்களில் இருந்து மாறுபட்டு சின்னத்திரை உலகின் புதுமையான நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது. ஜீ தமிழின் புகழ் பெற்ற “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடனக் கலைஞர்கள், டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர்.

நடனத்தை மையப்படுத்திய சாகச நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது. வழக்கமான நடன அரங்குகளுக்கு மாற்றாக வியத்தகு புதுமையான தளங்களில் நடனமாடவுள்ள கலைஞர்கள், நடனத்தின்போது எதிர்பாரா சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலம், நீர் மற்றும் அந்தரத்தில் நடனமாடவுள்ள கலைஞர்கள், தாங்கள் சந்திக்கும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டு நிலை குலையாமல் தொடர்ச்சியாக நடனமாடித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.