சிவகாசியில், உலக அயோடின் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 22:12

சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நுகர்வோர் மன்றம் சார்பாக, உலக அயோடின் தின விழிப்புணர்வு உறுதி ஏற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில்,  நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அயோடின் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  ஜெயச்சந்திரன் பேசும்போது, நாம் சாப்பிடும் உணவுகளில் அயோடின் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அயோடின் உப்பு சேர்க்க வில்லை என்றால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கமளித்து பேசினார்.


சிவகாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்  ஆனந்தராஜ் பேசும்போது,  அயோடின் உப்பு குறித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்ததுடன், மாணவ, மாணவிகளின் வீடுகளிலிருந்து கொண்டுவந்த உப்பில் அயோடின் உள்ள உப்பு,  அயோடின் இல்லாத உப்பு பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளியின், நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.