ராஜபாளையத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்: வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 22:11

ராஜபாளையம் :


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம், சுந்தரலட்சுமி.

இவர்கள் வீடு அந்தப்பகுதியில் சந்தில் இருப்பதால், தங்களது இருசக்கர வாகனங்களை அதே பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம். வழக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களுக்கும், சமூக விரோதிகள் யாரோ தீ வைத்துள்ளனர். இதனால் அந்த இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து சுப்பிரமணியம், சுந்தரலட்சுமி இருவரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.


 வழக்குபதிவு செய்த போலீசார், இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்த சமூக விரோதிகளை தேடி வருகின்றனர். வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.