நெல்லை மாவட்டத்தில் பிற்பகல் முதல் பரவலாக மழை

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 21:51

நெல்லை,


வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

 வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வானிலை ஆய்வு மையம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருந்தது. இதனை அடுத்து பிற்பகல் முதல்  நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  நெல்லை மாநகர் பகுதியில்  நெல்லை சந்திப்பு , டவுன், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, கேடிசி நகர் , என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.  

இதன் காரணமாக மழை நீர் தாழ்வான இடங்களில் தேங்கியும்,  சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.