தென்காசி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து; இருவர் பரிதாப பலி

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 18:08

தென்காசி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கரவாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி வாய்கால் பாலம் பகுதியைச் சார்ந்தவர்கள் சுந்தர் மற்றும் கணேசன் இருவரும் நண்பர்கள் இரண்டு பேரும்  ஒன்றாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தென்காசி அருகே உள்ள  கண்டமங்கலம் பகுதியில் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு தென்காசி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியானார்கள். ஒரே பகுதியை சேர்ந்த  இரண்டு பேர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விபத்து தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.