காயல்பட்டினத்தில் மக்தப்பாடத்திட்டத்தில் சுன்னத் ஜமாஅத் கொள்கை புரட்சி

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2021 11:15

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கை புரட்சியாக மக்தப் முஹ்யித்தீன் மதரசா  தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நபிகள் நாயகம் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் நபிகள் நாயகம் மீது அவர்களை புகழும் வகையில் 100 கோடி சலவாத் சமர்ப்பண விழா நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய சுன்னத் ஜமாத் கொள்கைகளை பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தருவது தொடர்பான வகுப்புக்கள் தொடங்கியுள்ளன. மக்தப் முஹ்யித்தீன் மதரசா என்ற பெயரில் அந்த வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடந்து வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குர்ஆன் கற்பித்தல், நபிகள் நாயகம், அவர்களது வாரிசுகள் பற்றிய ஹதீது கல்வி ஆகியவை இந்த வகுப்புக்களில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு போதிக்கப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கம் தொடர்பான இந்த சிறப்பான சேவையினை ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் சமுதாய முன்னிலையாளர்கள் குழுவினர்களாக இணைந்து செயல்படுவதாக காயல்பட்டினம், குத்துக்கல் தெருவில் உள்ள மக்தப் முஹ்யித்தீன் மத்ரஸா நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அது தொடர்பாக தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு 9025952242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.