நவராத்திரி 7ம் நாள்: மீனாட்சிஅம்மன் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 21:36

மதுரை:


உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7ம் தேதி அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  

ஏழாம் நாளான இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.