விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 21:35

விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் தொய்வில்லாமல் நடந்து வருகிறது. தினமும் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

 பொதுமக்களும் ஆர்வமாக சென்று தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று புதிதாக 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 183ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதம் துவக்கத்தில் இருந்து மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.