சிவகாசி மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்திற்கு ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கிய ரோட்டரி பைரோசிட்டி சங்கம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 21:34

சிவகாசி :


விருதுநகர் மாவட்ட சிவகாசியில், ரோட்டரி பைரோசிட்டி சங்கத்தின் சார்பில் சமூக சேவை கருத்தரங்கு நடைபெற்றது.


ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜெசிந்தா தர்மா தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான், மாவட்ட இணை ஆளுநர் மகேஸ்வரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சிறப்பு பேச்சாளர் பேராசிரியர் ராமசந்திரன் மாற்றமாயிரு என்ற தலைப்பில் பேசினார்.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, சிவகாசி நகரை பசுமை நகராக உருவாக்க வேண்டும். நகரின் பல பகுதிகளில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.


சிவகாசி ரோட்டரி பைரோசிட்டி சங்கம் சார்பாக,  மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவகாசி நகராட்சி ஆணையாளரிடம், மியோவாக்கி திட்டத்திற்காக 5 லட்சம் ரூபாய் காசோலையை நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்டரி பைரோசிட்டி மாவட்ட  தலைவர் வீரபத்ரன், மாவட்ட துணை ஆளுநர் ராஜேஷ்கண்ணன், சங்க தலைவர் விக்னேஷ், செயலாளர் ஞானஸ்ரீதரன் உட்பட பலர் செய்திருந்தனர்.