நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை கைப்பற்றியது திமுக

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 21:00

நெல்லை,நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருக்கும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு உள்ள 12 இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுக 10 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி இரண்டு இடங்களிலும் போட்டியிட்டது அதேபோல திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் 11 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிட்டது.

12 தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி நெல்லை மாவட்டத்திலுள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி இடங்களையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறைமுகத் தேர்தல் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை திமுக சார்பில் வேட்பாளராக அறிவித்து அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.