பருவமழை கால மின்சார விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு; மின்சார வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 20:59

வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் நெல்லையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்டது.

      தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின்  நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் சார்பாக எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடைபெற்றது.


இதில் மேற்பார்வை மின் பொறியாளர் செல்வராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த துண்டு பிரசுரத்தில் இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி உள்ளிட்டவர்களை பயன்படுத்தவேண்டாம், நீர் தேங்கியுள்ள இடங்களை கிடைக்கும் போது அருகில் உள்ள மின் கம்பிகள் ஏதேனும் தண்ணீரில் கலந்து விழுந்து உள்ளதா என்பதை பார்க்க வேண்டும், ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தத் துண்டு பிரசுரம் சமாதானபுரம் ஊரில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.


  இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.