மதுரவாயில் துறைமுகம் இடையே இரண்டடுக்கு மேம்பாலம் -சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 19:54

சென்னை

மதுரவாயில் சென்னை துறைமுகம் உயர்மட்ட மேம்பாலம் புதிய வடிவில் தொடங்கப்பட இருக்கிறது, இந்த டபிள் டக்கர் மேம்பாலம்  கீழடுக்கில் 6 வழிப்பாதையில் பொதுப்போக்குவரத்தும் மேலடுக்கில் நான்கு வழிப்பாதையில் துறைமுகத்திற்கான போக்குவரத்துக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது என சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் இன்று தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் கண்டைய்னர் லாரிகளை தடையின்றி  செல்ல  24 மணிநேர கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

 இது குறித்து அவர் இன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை துரைமுகத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக  துறைமுக சாலைகள் இணைப்புக்காக ரூ 600 கோடி, உள்நாட்டு கடலோர சரக்கு போக்குவரத்து சாலை வசதிக்கு ரூ 66 கோடி,  கடலோர வர்த்தக சரக்கு முனையம் அமைக்க  ரூ 80 கோடி ரயில்வே இணைப்பு பாதைக்கு  ரூ 16 கோடி உள்ளிட்ட திட்டங்களுக்காக  கடந்த 7 ஆண்டுகளில் 779 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதனால் ரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து மட்டுமல்லாமல் கடல் சார்ந்த வணிகமும் மேம்பாடு அடையும் 

மதுரவாயில் சென்னை துறைமுகம் உயர்மட்ட மேம்பாலம் புதிய வடிவில் தொடங்கப்பட இருக்கிறது, இந்த டபிள் டக்கர் மேம்பாலம்  கீழடுக்கில் 6 வழிப்பாதையில் பொதுப்போக்குவரத்தும் மேலடுக்கில் நான்கு வழிப்பாதையில் துறைமுகத்திற்கான போக்குவரத்துக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது,  20.5 கீ.மி துாரத்தில் இந்த டபிள்டக்கர் உயர்மட்டமேம்பாலம் அமையும் .13 இடங்களில் சாய்வு பாலங்கள் அமைக்கப்பட்டு கீழடுக்கு பாலத்துடன் இணைக்கப்படும் ரூ 5, 965 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்த உள்ள இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கை  வழங்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

சென்னை துறைமுகத்திற்கு கிட்டதட்ட 5 ஆயிரம் கண்டைய்னர் லாரிகள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன, இப்போது அந்த கண்டைய்னர் லாரிகள் செல்வதில் முன்பை விட சற்று வேகம் காட்டப்படுகிறது, இந்த கண்டைய்னர் போக்குவரத்தில் எந்த தடையும் தாமதமும் இல்லாமல் செல்ல  24 மணிநேர ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுனில் பாலிவால் தெரிவித்தார்,

துறைமுக பொறுப்பு கழகத்தின் துணைத்தலைவர் பாலாஜி அருண்குமார் பேட்டியின்போது உடனிருந்தார்.