சென்னையில் தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2021 19:54

சென்னை

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் திருவொற்றியூர் சுகம் மற்றும் ஆகாஷ் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (19-9-2021) நடைபெற்றது.

ஆகாஷ் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.செல்வராஜ் குமார் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் உட்பட சிலருக்கு தடுப்பு ஊசி செலுத்தினார்.

அதேபோல் சுகம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர்  டாக்டர் டி.பி.டி .சத்திய குமார் தலைமையில் டாக்டர் பிரவீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

சுகம் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமில் மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் சத்யகுமார், தடுப்பூசி செலுத்தினார்

கொரோனா தடுப்பூசி முகாமில் மேலாளர் செல்வராஜ் ஆதித்தன், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.