சென்னை போக்குவரத்து காவல் பணியில் மீண்டும் டிராபிக் வார்டன்கள்

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2021 18:59

சென்னை, செப். 19–

சென்னை மாநகர் போக்குவரத்துக் காவல் பணியில் மீண்டும் டிராபிக் வார்டன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையில் போக்குவரத்து போலீசாருக்கு துணையாக போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் டிராபிக் வார்டன்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் டிராபிக் வார்டன்கள் போக்குவரத்துப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது அவர்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 145 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில் சரக அதிகாரிகளால் குறிப்பிடப்படும் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் வழக்கமான சாலை பாதுகாப்பு பணிகளை செய்கின்றனர். நேற்று முதல் சென்னை சென்ட்ரல் பாயிண்ட், தொழிலாளர் சிலை, காந்தி சிலை, ஸ்பென்சர் சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலையம், நந்தனம் சந்திப்பு, madly சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா மற்றும் கடற்கரை பகுதிகளில் (மெரினா மற்றும் எலியட் கடற்கரை) இவர்கள் மீண்டும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். அவர்களை சென்னை நகர போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார் நேற்று சென்ட்ரல் ரயில் நிலைய  போக்குவரத்து  சந்திப்பில் பணியிலிருந்த டிராபிக் வார்டன்களை சந்தித்து அறிவுரைகளை வழங்கினார்.