நிலப்பிரச்சனை: விவசாயியை அடித்து கொலை செய்த உறவினர்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 20:16

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி சண்முகையா என்பவரை நிலப்பிரச்சனை காரணமாக அவரது உறவினரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகையா(60)  இவருக்கும் அவரது உறவினரான  பெரியதுரை என்பவரும்  நீண்ட நாட்களாக விவசாய நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும்  விவசாய தோட்டத்திற்கு சென்று உள்ளனர். விவசாய நிலம் அருகருகே உள்ளதால் மீண்டும்  நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது ,   இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே அப்போது ஆத்திரத்தில் பெரியதுரை சண்முகையாவை அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சரமாரியாக அடித்துத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த  சண்முகையா  ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பெரியதுரை  பனவடலிசத்திரம் காவல்நிலையத்தில் சரணடந்தார்.  இதனையடுத்து  சம்பவ இடத்திற்குவிரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த விவசாயி சண்முகையாவின்   உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விவசாயியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.