ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 20:12

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் 2293 பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திட்ட இயக்குனர் பழனி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும் வாக்குச்சீட்டுகள் குறித்த விபரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது. தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்தார்.