எட்டு மணிநேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 20:12

 8 மணிநேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும்,  வாரம் ஒரு நாள் மற்றும் பண்டிகை தினங்களில் அரசு விடுப்பு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் செவிலியர்களுக்கு காலை 8 மணி முதல் 4 மணி வரை 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும்,  கொரோணா தடுப்பூசி  பணிகளை குழுவாக  செய்ய அனுமதிக்க வேண்டும் சர்வே பதிவு உள்ளிட்ட பணிகளில் பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்தப்பட வேண்டும், தாய்சேய் நல பணிகளுக்கு செவ்வாய்,  புதன் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் , HSC ஊழியரை செவிலியராக   நியமனத்தை கைவிடவேண்டும் வார விடுமுறை நாள் பண்டிகை விடுமுறை நாள் அளிக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ரமா தலைமையில்   நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்   இந்த போராட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து கிராமப்பகுதிகளில் தடுப்பு ஊசி இல்லாமல் தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக செவிலியர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர் இந்த போராட்டத்தினால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிகளை புறக்கணித்தனர் இதனால் கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.