நீர் வீழ்ச்சி போன்றதொரு வைர நகை கலெக்சன் ஜூவல் ஒன்னில் அறிமுகம்

பதிவு செய்த நாள் : 03 செப்டம்பர் 2021 18:02

சென்னை, செப்- 3

எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பிரபலமான சில்லரை வர்த்தக பிராண்டான ஜூவல்ஒன்  புதிதாக வைர நகை கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது. நீர் வீழ்ச்சி அழகை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய கலெக்ஷனுக்கு நிர்ஜரா எனப் பெயரிடப்பட்டுள்ளது..

நீர்வீழ்ச்சி போன்று அழகிய தோற்றப்பொலிவுடன் திகழ்வதோடு மட்டுமின்றி, வைரம் போன்ற காலத்தால் அழியாத வடிவமைப்பைக் கொண்டதாக இது விளங்கவுள்ளது.பு திய வைர நகை லோகோவையும், கலெக்ஷனையும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் . கே. சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி என். வைத்தீஸ்வரன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள ஜூவல்ஒன் கிளையில் \அறிமுகம் செய்தனர்.

நகை வடிவமைப்பில் மிகவும் அனுபவம் மிக்கவர்களால் கலைநயத்துடன் இந்த வைர நகை கலெக்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இயற்கை வைரக் கற்கள் (Natural Diamonds) பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நகைகளை 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்தியாளருக்கான ஜே.என்.ஏ. (JNA) விருது பெற்ற எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் கோவை நகரிலிருந்து உருவாகி இன்று ஆசியாவிலேயே மிக உயர்ந்த வைர நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழ்கிறது.