மூலக்கொத்தளம் கால்பந்தாட்ட அணிக்கு வெற்றிக்கோப்பை

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2021 21:19

சென்னை

மறைந்த தமாக தலைவர் மூப்பனாரின் 20வது நினைவு நாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட தமாகா சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று மாலை நடந்தது.

இதில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சிற்ப்பு விருந்தினராக பங்கேற்று மூலக்கொத்தளம் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் ரமேஷ் உள்ளிட்ட 14 பேருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசுகையில்,

தேர்தல் நேரத்தில் திமுக பல வாக்குறுதிகளை வழங்கியது.இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000, கூட்டுறவுக்கடன், நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை வழங்கியது.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றாமல் ஏமாற்றக்கூடாது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடசென்னை தெற்கு மாவட்ட தமாகா தலைவர் ராயபுரம் பி.எம். பாலா ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் த.மா.கா மாநில பொதுசெயலாளர்கள் முனவர் பாட்சா, சண்முகவேல், திருவேங்கடம், சக்திவடிவேலு, சென்னை நந்து, மாநில பேச்சாளர் அதிரடி வேலு, உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்