தலித் கிறிஸ்தவர்களுக்கு வேண்டும் பட்டியல் உரிமை - பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2021 16:33

சென்னை

தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க குரல் கொடுங்கள் என தமிழ்நாடு எம்பிக்களுக்கு பேராயர் கோரிக்கை தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்யஅளித்த பேட்டி:

இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறிய தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பட்டியலினத்தவராக கருதப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், கடந்த 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ம்தேதி ஆணை பிறப்பி்த்தார், அந்த நாளை தலித் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளாகவும் தங்களுக்கு உரிமை கோரும் நாளாகவும் கடைபிடித்து வருகிறோம், இந்த ஆணை சீக்கியர்களுக்கும் பெளத்தர்களுக்கும் தளர்த்தப்பட்டது, ஆனால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியவர்களுக்கு இன்னமும் தளர்த்தப்படவில்லை,. 

கிறிஸ்துவம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்தவத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது, இதற்காக தலித் கிறிஸ்தவர்கள் ஜனநாயக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம், இது குறித்த வழக்கு இருப்பதால் அந்த சட்டம் நீக்கப்படவில்லை, மதம் மாறிய கிறிஸ்தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை வழங்க பிரதமர் மோடி ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார், 

பேட்டியின்போது.மேன்வேல் டைட்ஸ், பால் நவராஜ் ,அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்