கொரோனா காலத்தில் அரிய சேவை புரிந்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பாராட்டு

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2021 20:26

சென்னை

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு அரிய சேவைகள் புரிந்த ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜகுமாரை  அபெக்ஸ் மருந்து நிறுவன அதிகாரிகள்  பாராட்டி மலர்க்கொத்து வழங்கினர்.

சென்னை எழும்புரில் உள்ள ரமடா நட்சத்திர ஹோட்டலில் க்லேவிரா க்ரீன் மில்க் ஆஃபேக்ஸ் சார்பில் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்பு மிக்க சேவை புரிந்த  மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய சுமார் 60 மருத்துவர்களுக்கு ஆஃபேக்ஸ் பொது மேலாளர் ஸ்ரீதர் மேலாளர் ராகவன், ஆர்வி. ஷர்மா, வி. பாலாஜி, என். ராஜகோபால் ஆகியோர்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்,

இதில் திருவொற்றியூர் செல்வி மருத்துவ சேவை மையத்தின் நிறுவனர் ஆயுர்வேத மருத்துவர் ஜி. ராஜ்குமார்  பாராட்டு தெரிவித்து பூங்கொத்து மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.