நெல்லை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 20:02

நெல்லை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தொடர்ந்து அதன் பாதிப்பு நீடித்து வருகிறது.

 இதன்படி நெல்லை மாநகர் பகுதியில் 6 பேருக்கும், மானூர் பகுதியில் இருவருக்கும் , நாங்குநேரி பகுதியில் 2 பேருக்கும்,  ராதாபுரம் பகுதியில் 3 பேருக்கும் வள்ளியூர் பகுதியில் ஒருவருக்கும்  , சேரன்மகாதேவி பகுதியில் 6 பேருக்கும்  , களக்காடு பகுதியில் ஒருவருக்கும்   என மொத்தம் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது