நெல்லை புதிய பி.ஆர்.ஓ பொறுப்பேற்பு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 20:02

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெய அருள்பதி பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய நவாஷ்கான் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதனையடுத்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய ஜெய அருள்பதி நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு புதிய அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.